உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பச்சைக்கனவு.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சைக் கனவு O 9

கிளி. பச்சை”க்கிளி. அவள் மாடியேறி வரும் சத்தம் கேட்டது. எதிரே மேஜைமீது டம்ளரை வைத்தாள். என்னது? பால். பசும்பால், பச்சைப்பால், அவன் குறிச்சி கையைப் பிடித்தவாறு மண்டியிட்டாற்போல் அவன் காலடியில் உட்கார்ந்தாள். அவள் விரல்கள் அவன் கைமேல் பட்டன.

மெதுவாய், 'கோபமா?" 'இல்லையே! நிஜமாகவே இல்லைதான். நேற்றிரவு கண்ட கனவு எழுப்பிய நினைவுகளுக்கு அவள் என்ன செய்வாள்?

பின்னே ஏன் ஒரு மாதிரியாயிருக்கேள்?’’ 'நான் நேற்றிரவு ஒரு கனாக்கண்டேன். உன்மேல் கோபமேயில்லையென்றால் நம்பு, தப்பு என்மேல்.’

'இல்லை என்மேல்தான். உங்களுக்கே தெரியும்.' 'இல்லை, ஒருத்தருக்கொருத்தர் இப்படிப் பரிமாறிக் கொள்வதற்காக நான் சொல்லவில்லை. என்னைச் சமாளிப்பது கொஞ்சம் கஷ்டம்தான். நீயும் உன் தம்பியும் இப்படிக் கொஞ்சம் இடமாற்றலாய் எங்கேயாவது போய் இருந்துவிட்டு வாருங்களேன்.'

"அடேயப்பா, ரொம்ப ரொம்பக் கோவம்போல இருக்கு! எனக்குப் புகலிடம் ஏது? உங்களுக்கே தெரியும் நானும் தம்பியும் அனாதையென்று.”

'அந்த ஒரே காரணத்தால் உன்னை நான் கலியாணம் பண்ணிக்கொண்டது தப்புத்தானே! எனக்கு ஆதரவை முக்கியமாய் நினைத்து உன்னை மணந்தது உன்னை ஏமாற்றியதுபோல் தானே! உனக்குத் திக்கில்லாததை என் செளகரியத்திற்காக உபயோகித்துக் கொண்டுவிட்டேன். ஆனால் நானும் திக்கில்லாதவன்தான், அதனால் என் காரியம் எனக்கே தெரியவில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/18&oldid=590674" இலிருந்து மீள்விக்கப்பட்டது