உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 2 + பட்டினத்தடிகள் வளர்ச்சி பெற்றுத் திகழ்கின்றது. தன்னுடைய அறிவு வளர்ச்சியில் மொழியைப் படைத்து அம்மொழியின் துணையால் தன் அநுபவங்களையெல்லாம் பல துறை யாகப் பிரித்து மன்பதை உய்யும் பொருட்டுப் பதிவு செய்து வைத்துள்ளான். இத்தகைய நூல்களைப் படிக்கும் பயனை, அறம்பொருள் இன்பம்வீடு அடைதல்நூல் பயனே" என்றும் மன்பதைக்கு வழிகாட்டும்பாங்கில் வரைந்து வைத்துள்ளான். மனித அநுபவங்களை கற்றல் கல்வி' என்பது. அக்கல்வியின் பயனையே இந்நூற்பா குறிப்பி டுகின்றது. வீடு பேறே நூல் கற்பதன் நோக்கம்; நூல் நுதலும் பொருளும் அதுவே. ஆன்மா பரம்பொருளை அடைவதற்கான வழியைச் சொல்ல வேண்டும். சொல்பவனாகிய புலவன் தன்னைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை என்பதே சங்க காலத்தின் பின் வந்துள்ள தமிழ்ப் புலவர் அனைவரும் கொண்டி ருந்த கருத்தாகும். இக்காரணத்தால் ஒரு புலவரையோ அவர் செய்த நூலையோ நாம் ஆராயப் புகுந்தால் உண்மைச் செய்திகள் கிடைப்பது அருமையிலும் அரு மையாக உள்ளது. புலவர் தம்மைப் பற்றிச் சொல்வது பெரும்பான்மையும் இல்லை. பின் வந்தோர் சொல்லும் கதைகளே நமக்குக் கிடைத்துள்ள பொருள். இவையும் படலம் படலமாக உண்மை காண முடியாமல் மறைப்ப வையாகவே அமைந்துள்ளன. பெரும்பாலும் இவை கற்பனை, உயர்வு நவிற்சியாக இருப்பதால் வரலாற்று ணர்ச்சிக்குப் பொருத்தமான செய்திகள் கிடைப்ப தில்லை. 2. நன்னூல் - பாயிரம் - நூற்பா - 10