உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்திரகிரியார் { 19 4 அந்த நாய்க்குட்டி காசி ராசன் மகளாகப் பிறந்து வளர்ந்து மங்கைப் பருவம் அடைந்தது. அரசன் அவ ளுக்கு மனம் செய்விக்க முற்பட்டபோது அவள், "தந்தையே, என்னை இப்போது மனத்தில் ஈடுபடுத்த வேண்டா என் குருநாதர் திருவிடைமருதுர் மேலைக் கோபுர வாயிலில் இருக்கிறார். அவரிடம் என்னை இட்டுச் செல்வீராக’ என்று வேண்டினாள். அரசனும் அதிசயித்து அவ்வாறே இட்டுச் சென்று பத்திரகிரியார் முன்பு விட்டான். சிவபோகத்திலிருந்த பத்திரகிரியார் கண் விழித்துப் பார்த்து இப்பெண்ணை நோக்கலும், இப்பெண் 'குருநாதரே, அடி நாய் மீண்டும் தேவரீரின் திருவடியை நாடி வந்தது' என்று இயம்பினாள். நிகழ்ந் தவற்றை அருள் நோக்கோடு உணர்ந்தார் பத்திரகிரியார். அப்பெண்ணை அழைத்துக் கொண்டு கீழைக் கோபுர வாயிலில் இருந்த பட்டினத்தடிகள் திருமுன் சென்று, 'அடிகள் பெருமானே, நும்முடைய பிரசாத சேடம் உண்ட நாய்க்கும் இப்பிறவி நோய் வரலாமா?’ என்று விண்ணப்பம் செய்தார். இவற்றைக் கேட்ட பட்டினத்த டிகள் இறைவன் திருவருளையே எண்ணியிருக்க, அவ் விடத்தே ஒரு பெரும் சோதி தோன்றியது. அச்சோதி யில் பத்திரகிரியாரும் அப்பெண்ணும் கலந்து மறைய சோதியும் மறைந்தது. இது சம்பிரதாயமாக மக்களிடையே வழிவழியாக வழங்கி வரும் பத்திரகிரியாரின் வரலாறு. இதில் அடங்கி யுள்ள அற்புதங்கள் ஒருபுறம் இருந்தாலும் பத்திரகிரி என்ற ஓர் அரசர் இருந்து பட்டினத்தடிகள் திருநோக் கால் உலகனைத்தையும் ஒரே கணத்தில் துறந்து பின் திருப்புலம்பல் பாடல்கள் பாடி உரிய காலத்தில் முக்தி அடைந்தார் என்பது மட்டிலும் உண்மை. 2. "துறவாவது, பறறறத துறததல கனமததை நீங்கலாவதெப்படி? பட்டினத் தார், பத்திரகிரியார், வாமதேவர், சடபரதா முதலாயினோர் பற்றற நிற்றல் போல' என்பது அறியபபடும் (வள்ளலாா சரிததிரம்)