உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 27 பாடிய, பாலைபாடிய பெருங்கடுங்கோ. ஈண்டுக் கடறு எனப்படுவது, கடத்தற்கரிய பாலைவழி என்றே பொருள்படும். "ஆறுசெல் வம்புலர் தொலைய மாறுநின்று கொடுஞ்சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் (குறுந்தொகை: 33, "இருங்கடறு வளை இயகுன்றம்’ (புறம் ; 140), "வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக் கட்சி காணாக் கடமா நல்லேறு கடறு மணிகிளரச் சிதறு பொன் மிளிரக் கடிய கதழும்" (புறம்: 202) என வரும் இடங்களிலெல்லாம், கடறு எனும் சொல் காட்டையோ, மலையையோ வரைந்து குறிப்பதாகாது, அவை இரண்டினுக்கும் இடைப்பட்ட பாலை நிலத்தினைக் குறிப்பதாகவே புலவர்கள் பாடியுள்ளமையும் உணர்க. வெட்சி மலர் பாலைக்கே உரியதாதல் இவற்றாலும் உறுதியாதல் காண்க. ஆகவே அவ்வெட்சி மலர் புனைந்து நிரை கொள்ளும் வீரர், அப்பாலை நிலத்தவரே யாவர் என்பது உறுதியாம். அம்மட்டோ! நிரை கொள்ளும் வெட்சி வீரர் யாண்டும் வேட்டுவர், குறவர் எனக் குறிஞ்சித் திணைப் பெயர்களினாலோ, ஆயர், கானவர் என்ற முல்லைத் திணைப் பெயர்களினாலோ அழைக்கப் பெறுவதில்லை. மாறாக மறவர், எயினர் என்ற பாலைத் திணைப் பெயர் களினாலேயே அழைக்கப் பெறுகின்றனர். வெட்சியார் வென்று கொணரும் ஆனிரை கண்டு மகிழ்வார் கூறும் கூற்று அமைந்த "தலைத் தோற்றம்” என்னும் துறை யினையும், அந்நிறைகளை வெட்சியார் ஊர் மன்றத்தே கொண்டு நிறுத்தியதைக் கூறும் "தந்து நிறை” என்னும் துறையினையும் விளக்க வந்த புறப்பொருள் வெண்பா மாலைச் செய்யுட்களில், "எயிற்றியவர் வாட்கண் இடன் ஆட', 'கண்டாள் அணி நிரை வாண் முறுவல்