பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகிழ்ச்சியினையும் அ ள வி ட் டுக் கூற முடியுமா. முடியாது: மகிழ்ச்சியால் மெய்ம்மறந்து நிற்கும் அம்மக்களைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார் கபிலர். -

நாடு வறங்கூர, நாஞ்சில் துஞ்சக், கோடை நீடிய பைதறு காலேக், குன்றுகண்டன்ன கோட்ட யாவையும் சென்று சேக்கல்லாப் புள்ள; உள்ளில் என்றுழ் வியன்குளம் நிறைய வீசிப் பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறைப் பல்லோர் உவந்த -ഖണ്.

-அகநானூறு 42.

பரணர், கபிலர்க்கு நிகரான புலமை நலம் வாய்க்கப் பெற்றவராயிற்றே ! அதனல், பரணரும், கபிலர்கண்ட காட்சியைத் கண்டார்; தாம் கண்ட அக்காட்சி இன்பத்தை நமக்கும் காட்டியுள்ளார். அக்காட்சி இதோ:

செங்குட்டுவனேக் காணச் சேரநாடு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். இடையில், ஒரு காட்சியைக் கண்டார்; மழை இல்லை; அது இல்லாமையாய், மலைகள் வறண்டு காட்சி அளித்தன; அருவிகள் நீர் அற்றுப்போகவே, காண விரும்பினரல்லர்; இக்காட்சிக் கொடுமையால், கண்கலங்கச் சேரநாடு புகுந்தார் பரணர்: ஆங்கு அந்நாட்டிப் பேரியாறு பெருக்கெடுத்து ஓடுவதையும், நீர் பெற்ற உழவர் பென்னேர் பூட்டிப் பூரிப்பதையும், அ த ற் கு த் துணைசெய்ய, வானம் இடித்து முழங்கிப் பொழிவதையும் கண்டார்; அப்பெருமழை யில் நனையும் மகிழ்ச்சி மிகுதியால், கபிலர் காட்டிய காட்சிக்கு நிகரான காட்சியைக் காட்டிவிட்டார்.

2 17