பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாவீரர்களை வாழ்த்திப் பாராட்டும் வான்புகழைப் பெற்றுக் கொண்டுளது பதிற்றுப் பத்துப் பாட்டொன்று:

"நெடுவள் ஊசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் அம்புசேர் உடம்பினர் நேர்ந்தோர் அல்லது தும்பை சூடாது மலைந்த மாட்சி அன்னேர்.”

-பதிற்றுப்பத்து : 42 : 3-7

'கபில பரணர்' என, இரு பெரும் புலவர்களையும் ஒருங்கிணைத்துப் பெருமை பாராட்டுவர் தமிழகத்து மக்கள். அதற்குக் காரணம், அவ்விருவரின் புலமை ஒருபடித்தான்து: இவர் புலமை மிக்கதா ? அவர் புலமை மிக்கதா என அறுதியிட்டுக் காணமாட்டா ஆ ழ் ந் த புலமை வாய்ந்தவர் இருவரும் என்பதே. கபிலர் எண்ணுவதையே, பரணர் எண்ணுவார்; பரணர் எ ண் ணி ய ைத .ே ய , கபிலரும் எண்ணுவார்;

கபிலர் ஒரு காட்சியை காட்டினர்; அக்காட்சி இது; மழை இன்றி வறண்ட கொடும். பஞ்ச காலம், பல ஆண்டுகளகாத் தொடர்ந்து நீண்டு வருகிறது . மலைபோல் உயர்ந்த கரைகளைக் கொண்ட குளங்கள் எல்லாம் வற்றி விட்டன. குளங்கள் நீர் வற்றிப்போனமையால், பறவைகள் வருகையை அக்குளங்கள் இழந்து விட்டன. மழை இன்மையால், உழவு நடை பெறவில்லை. நாட்டில் வறுமை வளர்ந்தது; மக்கள் வாடினர்; இவ்வாறு பஞ்சம் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் போது, ஒரு நாள், எங்கிருந்தோ பெருமழை வந்தது. பெய்த மழை நீரால் அப்பெருங்குளங்களெல்லாம் நிறைந்து விட்டன; நீர் நிறைந்து கிடக்கும் குளங்களை அந்நாட்டு மக்கள் கண்டனர். அந்நிலையில், அவர்களின் மன எழுச்சியினையும்,

16