பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்புறநானூற்றுப் பாடலுக்குக் குறைந்தது அன்று பதிற்றுப் பத்துப் பாடல். சேரன் செங்குட்டுவன் சந்தித்த போர்க்களங்களுள் ஒன்று. பகைநாட்டு மண்ணின் மீது ஆசை கொண்டு சென்றமையால், அப்பகைநாட்டு எல்லைக் கண் கண்ட போர்க்களமும் அன்று-பகைநாட்டான் ஒருவன், தன் நாட்டின்மீது ஆசை கொண்டு வந்தமையால், தன்நாட்டு எல்லைக்கண் கண்ட போர்க்களமும் அன்று. மாறாகத் தன்னிலும் ஆண்மையாளர் ஒருவரும் இலர்-அத்தகு ஆண்மையாளர் எவரேனும் இருப்பின், என்ைேடு போரிட வருக, என அறை கூவல் விடுத்துவந்த வீரர்களைக் கொண்ட, பகைப்படை வரிசையை எதிர்கொண்ட போர்க்களம் அது.

அப்போர்க் களத்தில் செருக்கேடுே நிற்கின்ருன் செங்குட்டுவன் படையைச் சேர்ந்த வீரன் ஒருவன். என்னை எதிர்ப்பார் யாவரும் இலர், என்ற ஆணவம் கொண்டு களம் புகுவான எதிர்த்து, அவன் ஆற்றலை அழிக்கக் களம்புகும் வீரர் அணியும் தும்பை மாலை அணிந்திருந்தான்் அவ்வீரன்.

அந்நிலையில் பகைப் படைவீரர், களம்புகுந்து விட்டனர். அவர்கள் ஒவ்வொருவரையும் உற்று உற்று நோக்குகின்ருன் இவ்வீரன். ஆனல் எதிர்க்க வாள் எடுக்கின்ருன் இல்லை; இவ்வாறு புறக்கணித்துக் கொண்டே இருக்கும் அவன் கண்ணில் பட்டு விட்டான், ஒரு பகைநாட்டு வீரன். அவனை உற்று நோக்கினன் இவன். அவன் மார்பில், களம்பல கண்டு, மார்பில் பெற்ற விழும்புண்கள் பல, வெள்ளியஊசி கொண்டு தைத்து மருந்திட்டமையால் ஆறப்பெற்ற, விழுப்புண் தழும்புகள் நிறைந்திருப்பதைக் கண்டான். அவ்வளவே, இவனே மாவீரன்-நான் எதிர்த்து அடக்கவல்ல தகுதி வாய்ந்த தறுகளுளன் என்பதை உணர்ந்து கொண்டான். அவ்வளவே அவன் மீது பாய்ந்து விட்டான் வீரன். அத்தகு

15