பக்கம்:பதிற்றுப்பத்து-சுடர்வீ வேங்கை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'கோடியர் பெருங்கிளை வாழ, ஆடியல் உளையவர் கலிமாப் பொழிந்தவை எண்ணின்.

åíäää #ು மலி திரைப் பெளவத்து வெண்தலைக் குரூஉப் பிசிர் உடையத் தண் பல வரூஉம் புணரியிற் பலவே.'

- பதிற்றுப் பத்து: 42: 14-23

ஒப்பாரும், மிக்காரும் அல்லாதார்க்கு எதிராகப் படைக்கலம் ஏந்தல், பெருவீரர்க்குப் பெருமை சேர்ப்பதாகாது. தன்னொத்த வீரனையும், ஏன், தன்னினும் மிக்க வீரனையும் வெற்றி கொள்வதே வீரனுக்குப் பெருமை சேர்ப்பதாகும்.

பகை நாட்டு நாற்படையுள், அலை அலையாக அணி வகுத்துக் களம் புகுந்துவிட்ட யானைப்படையைத் தாக்கி அழிக்க வேண்டியது, களத்தில் நிற்கும் ஒரு வீரனின் கடமை யாகவும், யானைப் படை, தன்னைக் கடந்து சென்று கொண்டிருக்கவும், அப்படையைக் கண்ணெடுத்தும் நோக்காமல், பகைப் ப ைட வரிசையையே கண்கொட்டாமல் பார்த்திருந்தான்் அவன். அவன் எதிர் நோக்கியிருந்த யானை, களம் புகுந்துவிட்டது. அது, அரசர்க்கெல்லாம் அரசய்ை, வேந்தன் எனும் உயர்நிலைவாய்ந்த அரசர் குடியில் வந்த மாவீரன் ஊர்ந்து வரும் யானை அது; அதைக் கண்ணுற்ருன் அவ்வீரன். அவ்வள்வே, அய்யானையை நோக்கி விரைந்தான்். கைவேல் எறிந்து வெற்றி கொண்டான். அத்தகுவீரன் ஒருவனை அறிந்து பாராட்டியுள்ளார் ஆவூர் மூலங்கிழார் என்ற புலவர். "வேந்துர் யானைக்கல்லது, ஏந்துவன் போலான், தன் இலங்குஇலை வேலே’ (புறம் : 301) என்ற அவர் பாட்டைக் காண்க. . . . . . . " -

14