உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பனித்துளிகள் (கவிதை).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைசிறுத்துப் பூவிரிந்து மெலிந்தி ருக்கும் இளம்பிஞ்சு மாதுளையோ என்று சொல்லும் உடலிடுப்பு மார்புடையாள் ; ஒசிந்து செல்லும் ஊஞ்சல்போல் நடையுடையாள் ; கோடி இன்பம் அடுக்கிவைத்த கருவூல கங்கை; நாணம் அலங்கரிக்கும் பல்லக்கு : பார்த்த கண்கள் தடுக்கிவிழும் அடுக்குமலைச் சாரல் தாவும் தசைத்தென்றல் இசைத்தமிழின் மனிதத் தோற்றம். வேலப்ப முதலியென்ருல் அறியார் , ஆளுல் வெல்லச்சு முதலியென்ருல் அக்கம் பக்கம் நாலுதிக்கும் நன்கறியும் , வயிற்று றுப்பு காற்புறமும் உடம்பாக வளர்ந்த தோற்றம் , நீலக்கல் கணையாழி , கண்டுக் கண்போல் நீட்டிக்கொண் டிருக்கின்ற கடுக்கன் , இந்தக் கோலத்தைக் கொண்டிருக்கும் முதலி யார்க்குக் கோதைமகள் ; கொஞ்சிவரும் குமரிச் செல்வம். குடைக்காம்புக் கதிர்ச்செந்நெல் தோட்டம், அம்மன் குளத்தருகே அவர்க்குண்டு : மலேயோ ரத்தில் அடுக்குவைத்த மாளிகையும் தெருப்ப ணத்தை அளக்கின்ற அங்காடிக் கடையும், ஊரின் வடக்கிருக்கும் நூலாலை ஒன்றும், மூன்று வட்டிக் காசுக்கடையும் அவர்க்குச் சொந்தம். கொடிக்கப்பற் பணமுதலி குவித்து வைத்த குவியல்களுள் இக்கோதை வைரக் குப்பை. 4. பனித்துளிகள்