பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


ஏற்கப்பட்டிருந்தது”. கட்டடத் தொழிலுக்கும், கட்டடக் கலைக்கும் வேறுபாடு கூறுகிற பிறரும் நுணுகிய கலைத் தரத்துக்கு உயரமுடிந்த கட்டடமே கட்டடக்கலையாகிறது என்றே கூறுவர். தொழிலில் பணி நிறைவு மட்டுமே உண்டு. கலையில் நுண்ணிய அழகும், வேலைபாடுகளும் கூட உண்டு. தமிழர் கட்டடக் கலையிலும் இந்தக் கலையியல் கூறுபாடு நன்கு கவனித்து மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

ஐரோப்பாவில் ரேஷியோ, சினேஷியோ’ என்னும் இலத்தீன் மொழித் தொடர் போல இந்தியக் கட்டடக் கலை, நாகரிகம் தேவதச்சனாகிய விசுவன்மா, பிறர்க்குத் தச்சனாகிய மயன் இருவரும் ஏற்படுத்தியதத்துவங்களால் நிறைந்துள்ளது. இந்திய மன்னர்களில் ஒருவனாயிருந்த நளன் கட்டடக்கலை வல்லுநனாகவும் விளங்கியுள்ளான்.” அழகுக்கு அழகு செய்து முடிந்த பயன் தேடுவதே கட்டடக்கலை. அழகைத் தேடுகையில் பல அழகற்ற பிரச்சினைகள் சரியாகத் தீர்ந்துகூடப் போகலாம் என்கிறார் ரோகர் ஸ்க்ருடன். கட்டடக் கலையின் அழகியல் பற்றிய தமது நூலில் அவர் இக்கருத்தைக் கூறியுள்ளார்.11

இப்படிப் படிப்படியாய் அழகைத் தேடி வளர்ந்த பழ மரபும் வரலாறுமுள்ள கட்டடக்கலை தோன்றிமேலெழுந்த விதங்களை இனி ஒருவாறு காணலாம்.


குறிப்புகள்:

1. John Buchard and Albert Bush Brown, Excerpt from the Architecture of America, pp. 1-4.

2. “Architecture is a social Art. It may be argued must serve some social purpose but the demands upon architecture are clear. They impose limita.