பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

19

பேராசிரியர் பாரத்வாஜ் அவர்களின் இம்முடிபு தமிழர் கட்டடக் கலைக்கும், நகரமைப்புக்கும் மிகமிகப் பொருந்தி வரக் கூடியதாகும்.

கட்டடக் கலை மூலமும் நகரமைப்புத் திறன் மூலமும் பழந்தமிழர் பண்பாடு, மன வளர்ச்சி, உணர்வுகள், விழிப்பு நிலை, குணநலன்கள் எல்லாவற்றையும் சீர்தூக்கி ஆராய முடிகிறது.

கடல் கொள்ளப்படுவதற்கு முந்திய பூம்புகார் நகரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் பெருநகர அமைப்பை ஒத்ததாக விளங்கியது என்கிறார் வரலாற்றுப் பேரறிஞர் சதாசிவ பண்டாரத்தார்.4 பூம்புகார் அன்றியும் உறையூரும் சோழர் பெருநகராயிருந்தது.

இவ்வாறே பாண்டியர் கோநகராகிய மதுரை, சேரர் கோநகராயிருந்த வஞ்சி, பல்லவர் பெருநகராயிருந்த காஞ்சி முதலியன பற்றியும் போதிய சான்றுகள் நூல்களிற் காணக் கிடைக்கின்றன.

கட்டடக் கலை, நகரமைப்புக் கலை இரண்டின் வளர்ச்சிக்கும் ஆறு கூறுபாடுகளைக் காரணங்களாவும் அடிப்படைகளாகவும் அறிஞர் கூறுகின்றனர். அவை பின்வருமாறு :

  1. தேசிய வரலாற்றுப் பின்னணியும் அதன் நிகழ்கால விளைவுகளும் (Nation’s historical background and its impact on the present)
  2. தேசிய குணப் போக்கும், உணர்வுகளும் மக்கள் விழிப்பு உணர்வும் (National character, temperament and awakening of the people)
  3. சமுதாயப் பொருளாதார அரசியல் நிலைகள் (Socio economic and political conditions)
  4. நிலவியல் சார்ந்த உள்ளூர்க் கூறுபாடுகள் (Geographic and local factors)