பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


தனியார் வீட்டுக் கட்டடக் கலை (Domestic Architecture) பற்றிய பல்வேறு செய்திகள் மனையடி சாத்திரத்தில் கூறப்பட்டுள்ளன. இன்றும் தமிழ் மக்களிடையே மனையடி சாத்திரம் நம்பிக்கைக்குரிய ஒரு நூலாக விளங்கி வருகிறது. வீட்டுக்குரிய மனையைத் தேர்ந்தெடுப்பது முதல் கட்டுவது வரை மனையடி நூலின் இலக்கணங்களை மீறாமல் பார்த்துக் கொள்ளும் பண்பைக் காண்கிறோம். இவற்றில் சில வரையறைகளாகவே ஏற்பட் டவை. வேறு சில நீடித்த நம்பிக்கைகளாகவும் நன்னிமித்தங்களாகவும் கருதப்பட்டுப் பின்புமக்களால் ஏற்கப் பட்டவை. இரண்டையும் தனித்தனியே பிரித்துப் பாகுபடுத்திப் பார்ப்பது கூட இயலாத அளவு இரண்டறக் கலந்து விட்டவை என்பதைக் கற்கும் போதே விளங்கிக் கொள்ள முடியும்.

பழம் பெரும் தமிழர் நகரங்கள் பல. அவற்றுள்ளும் பூம்புகார், மதுரை ஆகிய நகரங்களின் அமைப்பைப் பற்றிச் செய்திகள் கிடைக்கிற அளவு வஞ்சிமாநகரத்தைப் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. பல்லவர் கோநகராக இருந்த காஞ்சி நகரின் அமைப்பைப் பற்றித் தெரியும் விவரங்கள் கூட அதனினும் முந்திய வரலாற்றுச் சிறப்பை உடைய வஞ்சி மாநகர் பற்றித் தெரியவில்லை. ‘வஞ்சிமாநகர்’ எது என்பது பற்றியே ஆராய்ச்சியாளர்கள் நடுவே கருத்து வேறுபாடு நிலவுகிறது.

சேர நாட்டிலேயே உள்ள கடற்கரை நகரமாகிய திருவஞ்சைக்களமா அல்லது கருவூர் ஆனிலை எனப்படும் கருவூரா என்பது பற்றி நீண்ட நாள் ஆராய்ச்சி வேறுபாடுகள் இருப்பதால் நகரமைப்பைப் பற்றி மட்டுமே இவ்வாய்வில் கருத்துச் செலுத்தப்படுகிறது. எந்த நகர் என்ற வினாவிற்குச் சிலம்பு முதலிய நூல்களில் கூறிய வஞ்சி என்று கொண்டு இவ்வாய்வு மேற்செல்லும். அரசனுடைய அரண்மனையைச் சுற்றியே கோட்டையும் மதிலும் அகழி