பக்கம்:பாசமுள்ள நாய்க்குட்டி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

ஒருநாள் அவர்கள் அரசனைப் பார்க்க அரண்மனைக்குச் சென்றார்கள்.

பத்தன் தான் துணி நெய்வதில் வல்லவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் சித்தன் தான் ஆடை தைப்பதில் சூரன் என்று சொல்லிக் கொண்டான்.

முத்தன் தான் சாயங் கொடுப்பதில் தலை சிறந்தவன் என்று கூறினான்.

"நாங்கள் மூவரும் சேர்ந்து உருவாக்கும் ஆடையைப் போல் இந்த உலகத்தில் இதுவரை யாரும் செய்ததில்லை" என்று மூவரும் கூறினார்கள்.

‘அரசே, தாங்கள் விரும்புவீர்களானால், தங்களுக்கு ஓர் அதிசயமான மாய ஆடையை நாங்கள் உருவாக்கித் தருகிறோம். துணியின் தரத்திற்கோ தையல் வேலையின் திறத்திற்கோ, அதற்குக் கொடுக்கும் வண்ணச் சாயத்தின் அழகுக்கோ ஈடாக நீங்கள் எதையும் காண முடியாது. இந்த அதிசயமாய ஆடையின் தன்மை என்ன வென்றால்,