பக்கம்:பாண்டிநாட்டுத் திருப்பதிகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பாண்டி நாட்டுத் திருப்பதிகள் இங்ங்ணம் நிறுவப்பெற்ற ஊரிலுள்ள வீடுகளின் சுவர் களில் நன்னிற மணிகளும் பச்சைக் கற்களும் ஒழுங்குபட இழைக்கப் பெற்றுள்ளதனால் அவை திண்ணைகளில் ஒளி வீசி நின்றனவாம். இந்த வீடுகளில் வாழும் வைணவர்கள் பயனில் சொல் பாராட்டுவதில்லை; அவர்கள் நாடோறும் வைணவர்கட்கும் அடியார்கட்கும் செல் விருந்தோம்பி வருவிருந்து பார்த்திருக்கும் உத்தம சீலர்கள்; தவறாது. நான்மறை யோதிக்கொண்டு காலம் போக்குபவர்கள். இவர்களையும் பெரியாழ்வார், காவகாரியம் சொல்லிலாதவர் நாடொறும் விருங் தோம்புவார் தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ்திருக் கோட்டியூர்’’’ (நாவகாரியம்-நாவினால் சொல்ல வொண்ணாதவை. : என்று குறிப்பிடுவர். மேலும், அவர்கள் உடலாலும், பொருளாலும், உயிராலும் பாகவத கைங்கரியத்தை மேற்கொண்டிருப்பவர்கள்; அவர்கள் முகமலர்ச்சிக்காக ஐந்து மாபெரும் வேள்விகளை விடாது மேற்கொள்ளுப வர்கள்*. எம்பெருமானுடைய திருக்குணங்களில் ஆழங்கால் பட்டும், அவனுக்கு விழாவெடுத்தும் இரவு பகலென ஒயாது ஆடியும் பாடியும் மகிழ்ந்து பொழுது போக்குபவர்கள்.* உணவுப் பஞ்சமும் விலைவாசி உயர்வும் தலைவிரித் தாடும் இக் கால வணிகர்கள், செல்வர்கள் இவர்களின் நடத்தையை நாம் நன்கு அறிவோம். ஆழ்வார் காலத்துத் திருக்கோட்டியூரில் வாழ்ந்த மக்கள் வற்கட காலத்திலும் பொருள்களை மறைத்திடாது , பிரதிபலனை எதிர்பாராது, 11. பெரியாழ். திரு. 4. 4 : 3 18. ഒു. 4.4 :5 12, 6; 4. 4 : Í 14, ഖ, 4, 4 "്