உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

குயிற் பாட்டு

“சுற்றவர்க்குச் சொல்வேன்; கவிதைக் கனிபிழிந்த
காற்றினிலே,பண்கூத்(து) எனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி அதனோடே இன்னமுதைத் தான்கலந்து
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால்
மாதவளின் மேனி வகுத்தான் பிரமன்என்பேன்”

என்று கூறிக் களிக்கும் சுவிஞரின் கவிநயம் படித்துச் சுவைத்தற்குரியதாகும்.

இப்பாட்டை முடிக்கும் பாரதியார் இறுதியில், இது கனவிற் கண்ட கற்பனையே யானாலும்,

‘வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானும் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?’

என்று ஆன்ற தமிழ்ப் புலவர்க்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இக்குயிற்பாட்டு ஒரு காதற் கதை போன்று தோன்றினாலும் தத்துவக் கருத்துக்களைத் தன்னகத்தே கொண்டொளிரும் தண்டமிழ்ப் பனுவலாக விளங்குகிறது. “கருத்தொருமித்த காதலர் இருவர் மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழ்ந்து இன்புறுவதோடு, அடுத்து வரும் பிறப்புக்களிலும் சிறப்புறக் கூடி வாழும் பீடு பெறுவர்” என்ற உன்மையைத் திண்மையுறக் காட்டி நிற்பது இப்பாட்டு.

இக்கதையில் பொதிய மலை முனிவர், கவிஞர், குயில் முதலிய பாத்திரங்கள் பயின்று வருகின்றன. முற்பிறப்பில் குயில், வேடர் குலத் தலைவன் மகள் சின்னக் குயிலியாகச் சிறந்து விளங்கிற்று, அப்போது அவளை மாடன், கெட்டைக் குங்கன், சேரநாட்டு இளவரசன் ஆகிய மூவரும் விரும்பினர். ஆனால் குயிலியோ வேந்தன் மகனையே விரும்பினாள். அவள் காதலுக்குத் தடையாக மாடனும் குரங்கனும் இடை நின்றனர். இப் பிறப்பில் சின்னக் குயிலி கன்னங் கரிய குயிலாகப் பிறந்தாள். அக் குயிலோ கவிஞன்பால் உண்மைக் காதல் கொண்டு உழன்-