பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

y உணவுப் பண்டங்கள் பல வடிவங்களையும் வண்ணங்களையும் சுவைகளையும் பெற்றிருக்கின்றன. பொதுவாகச் சுவைகளே ஆறு என்று வகுத்திருக்கிருர்கள். ஆனல் ஒவ்வொரு சுவை யிலும் எத்தனை வகை! புளியிலும் புளிப்பு உண்டு எலுமிச்சம் பழத்திலும் புளிப்பு உண்டு. இரண்டும் ஒன்ருகுமா? பல்வேறு மன இயல்புடையவர்கள் தங்கள் தங்களுக்கு விருப்பமான பண்டங்களைச் சுவைத்து இன்புறு வார்கள். ஒருவனுக்கு மி ள கா ய் க் க | ர ம் பிடிக்கும்; மிளகுக் காரம் பிடிக்காது. மற்ருெருவனுக்கு மிளகுதான் பிடிக்கும். "செத்தபிறகு சிவலோகம், வைகுந்தம் பெறலாம் என்று சொல்வது அன்று இந்து மதம். அது இந்த உடம்போடு இருக்கும் போதே இறையருள் அநுபவத்தைப் பெறலாம் என்று சொல் கிறது. அவ்வாறு அநுபூதி பெற்ற பெரியவர்கள் இங்கே இருந்தார் கள்: இப்போதும் இருக்கிரு.ர்கள்: இனியும் இரு பார்கள். தம்முடைய உள்ளத்துக்கு உவப்பான திருவுருவத்தில் மனத்தைப் பதித்துத் தியானம் செய்து இன்புறுபவர்கள் பக்தர்கள். உண்மையான பக்தன் தன்னுடைய உபாசன தெய்வத்தினிடம் பற்றுவைத்துச் சாதனை செய்து வருவான். ஆனால், பிற மூர்த்திகளிடம் வெறுப்புக் கொள்ளமாட்டான். அவரவர்கள் தம்வீட்டுப் புறக்கடையில் கிணறு தோண்டித் தண்ணிர் பெறுகிரு.ர்கள். தன் வீட்டில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் குளித்தும் குடித்தும் நலம் பெறுகிறவன் : மற்றவர்கள் வீட்டுக் கிணறுகளில் தண்ணிர் இல்லை என்று சொல்லமாட்டான். எல்லாக் கிணறுகளிலும் தண்ணிர் உண்டு என்ற உண்மையை அவன் நன்கு அறிந்திருப்பான். ஆனலும், தனக்கு வேண்டியபோதெல்லாம் பயன்படுவது தன் வீட்டுக் கிணற்றின் தண்ணிர் என்பதை அறிவான். ஒரு மூர்த்தியை வழிபடும் உண்மையான பக்தன், மற்ற வர்கள் வழிபடும் மூர்த்திகளாக இருப்பவர் தன் உபாசன தெய்வமே என்று எண்ணுவான். இதுதான் உண்மையான