பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

ió இட்ட மருந்தாயிற்று. பாவேந்தரொடு நெடுநாளைக்குப் பின் ஏற்பட்ட நேர்காணல் (சந்திப்பு) இது. திருமணம் ஆனபின் மனைவியுடன் மயிலம் சென் றேன். அங்கே நீண்டநாள் இருக்க முடியவில்லை. ஓர் ஆண்டிற்குள் இருமுறை என் மனைவிக்குக் கடுமையாக அம்மை நோய் கண்டது. யான் கல்லூரியில் நாடேறும் நான்கு மணி நேரம் பேசினேன்; காலையில் இரண்டு மணி நேரமும் மாலையில் இரண்டு மணி நேரமும், மயிலம் மடத்தில் இப்போது பத்தொன்பதாம் பட்டத்துத் தலைவராயிருப்பவர்க்கும் அவர் அண்ணனுக்கும் தமிழ் நூற் பாடம் நடத்தினேன். ஆக, ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் பேசியதால் மார்பு வலி நோய் கண்டுவிட்டது. 1946ஆம்ஆண்டு மனைவியுடன் புதுவைக்கு வந்து விட் டேன். ஒருசொல்பேசினாலும் மார்பு வலிக்கும்; ஒராண்டு காலம் பேச முடியாமல் படுக்கையில் கிடந்தேன். வேல்ை யிலிருந்து நானாக விலகி நிலையாகப் புதுச்சேரியிலேயே தங்கிவிட்டேன். - இந்தக் கட்டத்தில், ஒரளவு நோய் நீங்கி நலம் பெறத் தொடங்கியதும் வெளியில் வந்து போகத் தொடங்கினேன். 1947 ஆம் ஆண்டு பாவேந்தரோடு தொடர்பு கொண் டேன். அந்தத் தொடர்பு பாவேந்தர் இறுதி எய்தும்வரை நீடித்து நிலைத்திருந்தது.