பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

15 பாவேந்தரும் நீண்டகாலப் பகைவர்கள், பலமுறை ஒரு வரை ஒருவர் தாக்கித் துண்டறிக்கை வெளியிட்டவர்கள். இந்த நிலையில், துரைசாமி முதலியார் இறந்ததும், தமது தலைமையில் இரங்கல் கூட்டம் நடத்தி இரங்கல் உரை யாற்றிய பாவேந்தரின் உயர் பண்பு மிகவும் பாராட்டத் தக்கது. ஒரு வீட்டில் சாப்பறை ஒலிக்க, அடுத்த அல்லது எதிரி லுள்ள மற்றொரு வீட்டில் குளிர்ந்த இனிமையான மண முழவின் இசை ததும்பி நிறையும்படி இவ்வுலகத்தைப் படைத்தான் பண்பு இல்லாத ஒருவன் - என்னும் கருத் துடைய ஒர் இல் நெய்தல் கறங்க, ஒர் இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப். படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்’ என்னும் பக்குடுக்கை நன்கணியாரின் புறநானூற்றுப் பாடல் (194) பகுதியின்படி, ஒரு வீட்டில் இரங்கல் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போழ்து, அடுத்த வீட்டில் என் திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தீய நிமித்தம் (கெட்ட சகுனம்) சரி தானோ என்னவோ - என் திருமணமும் ஒரு சாவு நிகழ்ச்சி போலவே எனக்குத் தென்பட்டது; என்னென்ன காரணத்திற்காகவோ, இரவு முழுவதும், யாருக்கும் தெரி யாமல், படுத்தபடி யான் மெல்ல அழுதுகொண்டே யிருந்தேன். இது கிடக்கட்டும். இரங்கல் கூட்டம் முடிந்ததும், பாவேந்தர் திருமண வீட்டிற்கு வந்தார்; என்னை நேரில் கண்டு பேசி வாழ்த்து கூறிச் சென்றார். அந்த வாழ்த்து, எனக்குப் புண்ணில்