உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

35

ஒரு பெண்ணுக்கு ஆண்துணை அவசியம் என்று கருதுமளவுக்கு ஆணுக்கும் பெண் துணை அவசியமே. ஒரு பெண் சமுதாயத்தில் தனித்து வாழ விரும்பினால் அதைச் சமுதாயம் ஏற்றுக் கொண்டு அவளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும்.

இத்தகைய மனிதநேய அடிப்படையிலான மதிப்பைப் பெண்ணுக்கு அளிப்பதன் வாயிலாக, குடும்ப அமைப்பில் குழந்தைகள் நல்ல மனவளத்துடனும் உடல் வளத்துடனும் உருவாக முடியும். சமஉரிமை, சமத்துவம் என்ற பண்பை, இத்தகைய குடும்பச் சூழலில் குழந்தைகள் சுவாசிக்க முடியும்.

அடுத்ததாக, பிறவி எடுத்த எல்லா மக்களுக்கும் இன்றியமையாத கல்வியைப் பார்ப்போம். இந்நாட்களில் எல்லோருக்கும் கல்வி என்ற கொள்கை நூற்றுக்கு நூறு உண்மையாக இல்லை. அந்தக் கல்வியும் முற்றிலும் வணிகமயமாகி, மக்கள் சமுதாய வளர்ச்சியைக் கூறு போடவே உதவுகிறது. பல்வேறு தட்பவெப்பச் சூழல் கொண்ட பிரதேசங்கள் அடங்கிய இந்தியத் துணைக் கண்டத்தில், பல சமயங்கள், சாதிகள், மொழிகள்,இனங்கள் கொண்ட மக்கள் வாழ்கின்றனர். என்றாலும் இவர்கள் அனைவரும் ஒரே கலாசாரச் சரட்டினால் இணைக்கப்பட்டிருக்கின்றனர் என்றால் தவறில்லை. இந்த உண்மையை, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பயணம் செய்யும்போதும், மேற்கு மாநிலங்களில் இருந்து கிழக்கு மாநிலங்களுக்குப் பயணம் செய்யும்போதும் ஒருவரால் நன்கு உணர முடியும். இந்நாட்டில் வேரூன்ற வந்த பல்வேறு சமயங்களும்கூட, இந்தியத் தன்மை கொண்ட சமயங்களாக மக்களை ஒன்றச் செய்துவிட்ட சிறப்பையும் உணர முடியும். புறச்சின்னங்களுக்கப்பால் இந்த ஒருமைப்பாடு காலம்