உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய தமிழகம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொற்கை

பொருநையாறு இன்று கடலொடு கலக்கும் இடத் திற்கு நான்குடகல்_உள்டகள்ளிடஅவ்வாற்றின்டவ

கரையில் கொற்கை என்னும் பெயருடன் ஒரு சிற்றும்

இருக்இன்றது. பண்டைக்காலத்தில் பொருநையாறு

இவ்வூர் அருகிற்ன்க்லொடு இந்திவந்தது.(பொரு நையாற்று மண்ணும் மணலும் பல நூற்ருண்டுகளாக வந்து படிப்படியாக மேடிட்டுக் கடலைப் பின்னேக்கிச் செல்லும் படி செய்து விட்டதால், கொற்கை, துறை முகத்திற்குரிய வசதியை இழந்து விட்டது) இன்றுள்ள கொற்கையிலும் சுற்றுப் புறங்களிலும் கிளிஞ்சல்களும் முத்துச் சிப்பிகளும் கரைக்கடியில் சிறிது ஆழத்தில் கிடைத்தலே, கடல் இந் நிலப்பகுதியை அடுத்து இருந் தமைக்கு ஏற்ற சான்ருகும். கொற்கைக்குப் பின்னர்க் காயல் (இன்றைய பழைய காயல்') பாண்டியர் துறை முக நகரமாக விளங்கத் தொடங்கியது. கி. பி. 18 ஆம் நூற்ருண்டின் பிற்பகுதியில் காயலே சிறந்த துறை முக நகரமாக இருந்தது என்பதை மார்க்கோபோலோ குறித்துள்ளார். பின் நூற்ருண்டுகளில் கொற்கை பற் றிய பேச்சே யாண்டும் காணப்படவில்லை. எனவே, ஏறத்தாழ கி. பி. 12ஆம் நூற்றண்டுடன் கொற்கைப் பொலிவு மறைந்துவிட்டது என்று கொள்ளுதல் தவரு காது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_தமிழகம்.pdf/39&oldid=641911" இலிருந்து மீள்விக்கப்பட்டது