டாக்டர் இராசமாணிக்கனுர் 45
சிறு கோவில் ஒன்று இருக்கிறது. அது வெற்றிவேல் அம்மன் என்று பெயர் பெற்றுள்ளது. அங்குப் பழைய காலத்தில் கண்ணகியின் உருவச் சிலே இருந்த தாகவும், அஃது எவ்வாருே மறைந்து போனதாகவும் அவ்விடத்தில் இப்போது துர்க்கையின் சிலே வைக்கப் பட்டிருப்பதாகவும் எங்களுக்குப் பல இடங்களைக் காட்டி வந்த பெரியார் ஒருவர் கூறினர்.
கோவலன் மதுரையில் கொலையுண்டதற்குப் பதி லாகக் கண்ணகி சீற்றம் பொங்கி மதுரையை அழித் தாள் அல்லவா? அப்பத்தினித்தெய்வத்தின் உள்ளத் தைக் குளிர்விக்க அப்பொழுது கொற்கையை ஆண்ட வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்கொல்லரைப் பலியிட் டர்ன் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. அந்த வெற்றி வேற்செழியன், கான் ஆண்ட கொற்கையில் கண்ணகியம்மனுக்குக் கோவில் எடுப்பித்திருத்தல் இயல்பே. அவன் அவ்வம்மனே வழிபட்டிருத்தலும் பொருத்தமே யாகும். வெற்றிவேற் செழியனல் வழி படப்பட்ட அம்மன், வெற்றி வேல் அம்மன் எனப்
பெயர் பெற்றதில் வியப்பில்லேயன்ருே?
இப்பொழுது கோவிலிலுள்ள அமமனுக்குச் செழுகை நங்கை என்பது பெயர் என்று ஊரார் உரைக்கின்றனர். செழிய நங்கை (செழியன்-பாண்டி யன்) என்ற பெயரே இவ்வாறு செழுகை நங்கை என மாறி வழக்குப் பெற்றிருக்கலாம். செழி யனல் பூசிக்கப் பெற்ற கங்கை செழிய கங்கை எனப் பெயர் பெற்ருள் போலும் இக் கோவிலுக்கு அருகில் சில இடங்களில் பழைய உறை கிணறுகள் கண்டு