உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 சு. சமுத்திரம் சாமியார் கோவில் முன்னால் வந்து, இடுப்பில் செருகியிருந்த விபூதிப் பையை எடுத்து, திருநீரை இரண்டு தோளுக்குப் பக்கமாகவும், தலையிலும் போட்டுவிட்டு, 'சிவாய நம...' என்று தனக்குள்ளேயே கூவிக்கொண்டு பிறகு திருநீரை எடுத்து நெற்றிநிறைய பூசிக்கொண்டே, அருவியைப் பார்த்துப் போனார். ஆடைகளைக் களைந்து விட்டு, லங்கோட்டுடன் அருவியில் இறங்கி அப்படியே உட்கார்ந்தார். ஒ குருநாதா... ஒம் நமச்சிவாய நமக... ஒம்சிவாய நம...' என்று அவர் சொல்லச்சொல்ல, அப்படி அவர் சொல்வது தடைபடக் கூடாது என்பதுபோல், தலையில் விழுந்த அருவிநீர், அவர் வாய்க்குள் போகாமல் தோளிலும், மார்பிலுமாகச் சிதறியது. குளித்து முடித்த சாமியார் கோவிலுக்கு முன்னால் வந்து சிறிது நேரம் நடராஜர் சிலையையே உற்றுப் பார்த்துவிட்டு, நந்தியையும் வணங்கிவிட்டு மீண்டும் விபூதியைப் பூசிக்கொண்டு, லிங்கத்திற்கு அருகே இருந்த சதுரக்கல்லில் பத்மாசனம் போட்டு உட்கார்ந்தார். இாண்டு கைகளையும் மார்புடன் சேர்த்து வளைத்து, ஒன்றின்மேல் ஒன்றாக இருந்த உள்ளங்கைகளை அடிவயிற்றில் வைத்தபடி லேசாகக் கண்ணை மூடினார். அவர் மேனியை வியாபித்த காவியாடை நிலவொளியில் கிட்ட த்தட்ட மரப்பட்டைபோல் தோன்றியது. இன்னொரு விதத்தில் ஆசனம் போட்ட கால்களே ஆவுடையாராகவும், முதுகு லிங்கமாகவும் தெரிந்தது. சாமியாருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும் உள்நோக்கிப் பாய்ந்த வயிறு. வெளி நோக்கி நிமிர்ந்த தோள்கள். நுனி ஒவந்த மூக்கு. இரும்புத் துணுக்கு சிவப்பு வர்ணம் திட்டியது போன்ற கழுத்து. குருநாதரின் ஆக்ஞையில் மேற்கொண்ட ஆசனப் பயிற்சிகள், அவர் தன் உடம்பை தானே உணரமுடியாத நிலையில், உடம்புக்கூடு வேறு, அதில் உறையும் ஆன்மா வேறு என்று அவரே மிக மெல்லியதாய் அறியும் நிலையில் வைத்திருந்தன.