அதற்கு ஒரு தோழன்-ஒரு கிழவன்.
ஒத்த வயதில்தானே நட்பு ஏற்படும்; இதில் என்ன அதிசயம்?
விளக்கிற்குக் கிழவன்.
கிழவனுக்கு விளக்கு. விளக்கை எடுத்துவிடப் போகிறார்கள் என்று கிழவனுக்குத் தெரியாது.
அவனுக்கு எப்படித் தெரியும்?
அவன் வயிற்றுக்குப் பிச்சை எடுக்க வேண்டாமா?
வயிற்றுக்கு இல்லாமல் உயிர்வாழ முடியுமா?
தெரு விளக்கு அவன் தோழன்தான். அதன் வெளிச்சம் அவனுக்கு எவ்வளவு மன நிம்மதியை அளித்தது!
அன்று சாயங்காலம் வந்தான்.
வெறும் குழி ஒன்றுதான் இருந்தது.
இருள்! இருள்!
பற்றுக் கோலை யாரோ தட்டிப் பிடுங்கிக் கொண்ட குருடனின் நிலை!
அன்று அவனுக்கு உலகம் சூனியமாய், பாழ்வெளியாய், அர்த்தமற்றதாய் இருந்தது.
சாந்தி!அது எங்கிருந்துவரும்?
இந்தவிதமாக, மிஷின் யுகம், பொன்னகரம், கவந்தனும் காமனும் போன்ற பல கதைகள் லிரிக்கின் தன்மையில் அமைந்திருப்பதைக் காணலாம்.
இப்படிப்பட்ட கதைகளிலும் வாழ்க்கையின் யதார்த்தங்களை சுட்டிக்காட்டி, போகிற போக்கிலேயே தனது சிந்தனைகளையும் உரக்கச் சொல்வி, வாசகர்களையும் சிந்திக்கத் தூண்டுகிறார் புதுமை
‘நாகரீகத்தின் உச்சியைக் காணவேண்டுமென்றால், அந்த நகரத்தை, ஏன் எந்தப் பட்டணத்தையும், இரவில்தான் பார்க்க வேண்டும்.’