பக்கம்:புது டயரி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புது டயரி

9

 “பூ இதுதான? ஏதோ பிரமாதமாகப் பெரிய புத்தகமாகத்தான் எழுதப் போகிறீர்களாக்கும் என்று எண்ணினேன். அவ்வளவு பொறுமை உங்களுக்கு எங்கிருந்து வந்தது என்றுகூட ஆச்சரியப்பட்டேன்.”

அதற்குமேல் டயரி ஒடவில்லை. பத்து வரிகளோடு அந்தப் பக்கம் முடிந்தது. படுத்துக் கொண்டேன்.

4-ஆம் தேதி இராத்திரி எழுதத் தொடங்கினபோது என்ன என்ன கடிதம் வந்தது, என்ன என்ன பதில் எழுதினேன் என்று சரியாக ஞாபகம் வரவில்லை இதற்காக மண்டையை உடைத்துக் கொள்வானேன் என்று, நான் படித்த புத்தகங்களை எழுத எண்ணினேன். அன்று ஒரு நாவல் படித்தேன்; அவ்வளவுதான். சில பத்திரிகைகளைப் படித்தேன். பத்திரிகைகளை எழுதலாமா? அதிலே ஒரு சங்கடம், எந்தப் பத்திரிகையை எழுதுவது? மாதப் பத்திரிக்கையை எழுதுவதா? இல்லை, தினப்பத்திரிகையும் சேர்த்து எல்லாவற்றையும் எழுதுவதா? இப்படி எண்ணும்போது எனக்கே சிரிப்பு வந்தது. எழுதுவதற்கு விஷயம் இல்லாமல் தவிக்கிற தவிப்பினால்தானே இப்படியெல்லாம் எண்ணாத் தோன்றுகிறது? நாவலை மாத்திரம் எழுதினேன். அப்புறம் செய்த வேலைகள் இரண்டொன்றை எழுதி மூடிவைத்து விட்டேன். அன்று என்னுடைய சுய சரித்திரப் பகுதி ஐந்தே ஐந்து வரிகள்!

ஐந்தாம் தேதி எனக்கு இருந்த சுவராசியம் குறைந்து விட்டது. இனிமேல் தொல்காப்பியத்தைப் பற்றிச் சில நூல் எழுதும் எண்ணம் உதித்ததாக எழுதி ஒப்பேற்றினேன். அதோடு சரி. ஆறாந்தேதி முதல் டயரி டிராயரில் துாங்கியது. என்றைக்காவது கட்டுரை எழுதினால் அதை மட்டும் அந்தத் தேதியில் குறித்துக் கொண்டேன்.

பிப்ரவரி மாதம் முதல் தேதி பிறந்தது. அன்று புது ஊக்கம் உண்டாயிற்று. இன்று டயரியை எப்படியாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/16&oldid=1149394" இலிருந்து மீள்விக்கப்பட்டது