பக்கம்:புது டயரி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

புது டயர்

 வள்வுதானுங்களா?” என்றான். என்னிடமிருந்து ஒரு மலையளவு குடைகள் ரிப்பேருக்கு வருமென்று அவன் எதிர் பார்த்தானா என்ன?

“நாலு குடைகள்” என்றேன்.

“கீழே போடுங்கள்” என்றான்.

ஒவ்வொரு குடையாகப் பிரித்துப் பார்த்தான். “எல்லாம் படுமோசங்க. ரொம்ப வேலை கொள்ளுமுங்க” என்று பீடிகை போட்டான்.

“எவ்வளவு நேரமாகும்?” என்று கேட்டேன்.

“அதை இப்ப எப்படிச் சொல்லலாமுங்க? கம்பி ஒடிசல், துணி கிழிசல், காம்பு ஒடிசல்—இப்படி இருந்தா ஒவ்வொண்ணையும் கவனிச்சுச் செஞ்சாத்தானே முடியும்? சரியாச் செஞ்சாத்தானே நாளைக்கு மறுபடியும் கூப்பிடுவீங்க.”

அவன் என்ன சொல்கிறான்? நாளைக்கு மறுபடியும் கூப்பிடுவதா? இவற்றை ஒக்கப் பண்ணினால் நாளைக்கே ஒடிந்து போய் மறுபடியும் இவனைக் கூப்பிட வேண்டுமா?

அவன் சொன்னதைப் பார்த்தால் ஏதோ மலையைப் புரட்டுகிற காரியம் போல இருந்தது. எவ்வளவு நேரம் ஆகுமோ? நான் அலுவலகம் போக வேண்டும். அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டிருக்க முடியுமா? இப்போதைக்கு இரண்டு குடைகளை ஒக்கப் பண்ணச் சொல்லலாம். இந்த எண்ணத்தின்மேல், “சரி, சரி; ஒவ்வொரு குடையாக ரிப்பேர் பண்ணு; நேரம் இருந்தால் எல்லாவற்றையும் சரி பண்ணலாம். நான் ஆபீஸ் போகவேணும்” என்றேன்.

“ஐயா அவசரம் எனக்குத் தெரியாதுங்களா? இதோ ஜல்தி வேலை செய்து தர்ரேன். ஒரு அவர் போதும்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/23&oldid=1149415" இலிருந்து மீள்விக்கப்பட்டது