பக்கம்:புது டயரி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடைப் புராணம்

15

 “இந்தக் குடை நுனியைத் தையல் மிஷினில் தைக்க வேண்டும் என்று சொன்னிர்களே; அதை நினைத்துக் கொண்டு சிரித்தேன்.”

“இதைத் தைக்க வேண்டும் என்றால், அதற்குச் சிாிப்பானேன்?”

“தைப்பதற்காகச் சொல்லவில்லை. மிஷினில் தைக்க வேண்டும் என்றீர்களே, அதற்காகச் சிரித்தேன். ஊசியினால் தைக்கிறது இது” என்று விளக்கினாள்.

“சரி சரி, நீ ஊசியினால் தைப்பாயோ, உலக்கையினால் தைப்பாயோ, எனக்குத் தெரியாது. நாளைக்கு ஆபீஸ் போகிறபோது இது சரியாக இருக்க வேண்டும்.”

“உத்தரவுப்படியே எசமான்! இப்போது டிபன் ஆறிப் போகிறது. சாப்பிடலாம் அல்லவா?” என்று கேலிச் சிரிப்போடு அவள் கூறினாள்.

நான் சட்டையைக் கழற்றிவிட்டு அவள் போட்ட உத்தரவுக்குப் பணிந்து சிற்றுண்டி உண்ணப் புறப்பட்டேன்.

நல்ல வேளையாக மறுநாள் பொழுது விடிந்ததும், ‘குடைரிப்பேர்’ என்ற குரல் அமுதம் போல் என் காதில் விழுந்தது. வாசலில் பார்த்தேன். ஒரு முஸ்லிம் கிழவன் கையில் ஒரு கட்டுக் குடைக் கம்பி, பையில் ஏதோ கருவிகள் இவற்றுடன் பிரசன்னமானன். “இங்கே வா அப்பா” என்று அவனை அழைத்தேன். அவன் என் வீட்டு வாசலில் தன்னுடைய,சாமான்களை இறக்கி வைத்தான். உள்ளே போய் ஐந்து குடைகளையும் எடுத்தேன். நேற்றுக் கொண்டு போன குடையை என் மனைவி தைத்து விடுவாள் என்று எண்ணி, அதை மட்டும் வைத்துவிட்டு நாலு குடைகளை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தேன். கிழவன், “இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/22&oldid=1149414" இலிருந்து மீள்விக்கப்பட்டது