பக்கம்:புது டயரி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

புது டயரி

 பஸ்ஸில் ஏறி வீடு வந்தேன். உடம்பெல்லாம் சொத சொத வென்று நனைந்திருந்தது.

என் அற்புதக் கோலத்தைக் கண்டு என் வாழ்க்கைத் துணைவி பயந்து போனாள். “என்ன இது?” என்று அலறினாள்.

“ஒன்றும் இல்லை, உடையை மாற்றிக்கொண்டு சொல்கிறேன்” என்று உள்ளே ஒடினேன். மாற்றிக் கொண்டேன்.

“ஏன் இப்படி ஆயிற்று?”

“இந்தக் குடை சதி செய்துவிட்டது. மழைக்குப் பாதுகாப்பாக இருப்பதற்குப் பதிலாகத் திருப்பிக் கொண்டு மழையை ஏந்தும் கிண்ணமாகி விட்டது” என்று சொல்லி, எல்லாவற்றையும் விவரித்தேன்.

“சரி, சரி; நாளைக்குக் குடை ரிப்பேர்க்காரன் வந்தால் எவ்வளவு கேட்டாலும் சரியென்று எல்லாக் குடைகளையும் ரிப்பேர் பண்ணிவிட்டு மறு காரியம் பார்க்க வேண்டும்” என்றாள் அவள்.

“அதை விட வேறு காரியம் செய்யப் போகிறேன். நாளைக்குச் சம்பளம் வரும், முதல் காரியமாக ஒன்றுக்கு இரண்டாகப் புதுக்குடை வாங்கி வரப் போகிறேன்.”

அவள் யோசனையில் ஆழ்ந்தாள். எந்த விசேஷச் செலவுக்காக அவள் அதிகப் பணம் என்னிடம் கேட்க இருந்தாளோ, தெரியவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/29&oldid=1149423" இலிருந்து மீள்விக்கப்பட்டது