பக்கம்:புது வெளிச்சம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாக்கில் உள்ள இந்நலத்தை நம் தமிழகத்திலுள்ள புலவர் பெருமக்கள் எத்தனைபேர் புரிந்து கொண்டு ஒழுகுபவராயுள்ளனர். ஒரே ஒரு ஒற்றை மனிதன் உண்டா? நம்மிடமுள்ள மேன்மையை நம் அறியாமல், அறிந்து வெளிப்படுத்தி மற்ற மக்களைப் பின்பற்றி ஒழுகச் செய்யாமல் கற்ற - கற்பிக்கும் கல்வியில் நல்லது என்று கூற வேறு என்னதானிருக்கிறது.

'சொல்வன்மை' என்பதன் பொருள்தான் என்ன? உரத்த குரலில் சாதுர்யமாக, ரசம் சொட்டச் சொட்டக் கேட்பவர் உள்ளத்தில் பதியும்படியாக - இப்படியெல்லாம் சொன்னால் அச்சொல் வன்மையுடையதாகிவிடுமா? இல்லை. அறிவற்றவர் ஆராய்ச்சி யற்றவர்கள் ஒருகால் இத்தகைய சொற்களால் கவரப்பட்டு, கை ஒலி செய்து வரவேற்பர்; அறிஞர்கள், அதுவும் 'உத்’ எனும் சொல்லின் பொருளுணர்தொழுகின்றவர்கள், 'பாவம்' முழுக் குருடர்களுக்கு முக்கால் குருடன் வழிகாட்டி என்று தான் அதனை விமர்சிப்பர். என்று நான் அழுத்தமாக இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

நம்மை நாமறிந்த நிலையில், உண்மைக்கும் நீதிக்கும் வேறாகாத முழுமையான அறிவிலிருந்து வெளிப்படும் சொல்தான் வன்மையுடைய சொல்; அதுவே நிலையான சொல். வாக்கின் ரசம். அதுவே ஒம்! அதுவே உத்கீதம்.

எப்பொருளாயினும், அதை உரைப்பவர் எத்தகைய வராயினும், அவ்வுரையில் அடங்கியுள்ள உண்மைப் பொருள் அறியும் ஆற்றலுள்ளவரே உத்கீதத்தின் பொருள் உணர்ந்தவராகிறார்.

'ஐயப்படாது பிறர்தம் அகத்தில் உள்ளதனை அறியும் சக்தி எவரிடம் இருக்கிறதோ, அவரே உத்கீதத்தின் உண்மையை உணர்ந்தவர். தெய்வத்தோடொப்புக்கொள்ள வேண்டியவர்.

வெறும் ஏட்டுச் சுரைக்காய் படிப்பு உள்ளத்தைத் துாய்மை செய்யாத படிப்பு வெறும் சோற்றுக்கான படிப்புதான். எனவே ஆன்மிக படிப்பு அற்றநாடு என்றும் அடிமை நாடு அவலத்துக்குரிய நாடாகவே இருக்கும்.

புது வெளிச்சம்

ᗍ 11