உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூங்கொடி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

65

70

75

படைத்தனர் பிறர்க்கும் பகிர்ந்து கொடுத்தனர்; கடைத்தெரு வெங்கணும் களிகொள் ஆட்டம்;

ஏறு தழுவினர்

கவைபடு கூரிய காளையின் கொம்பிடைத் துவைபடத் தழுவிச் சுற்றிய துணிமணி அவிழ்க்கன ராகி ஆர்த்தனர் காளையர்; அன்பிற் குரிய ஆடவர் காளையை அஞ்சில ராகி நெஞ்சுரங் காட்டி க் குழுவினர் நடுங்கக் கழுவுதல் கண்டு வஞ்சியர் களித்தனர் வாழ்த்தொலி கூவினர்;

கலை நிகழ்ச்சி

அறிஞர் ஒருபால் ஆய்வுரை நிகழ்த்தினர், கலைபயில் கூத்தினைக் கண்கவர் அரங்கில் இலகிகர் எனுமா றேற்றினர் கலைஞர், இசையொலி கடலொலி பிறக்கிட எழுந்தது, வசையெனப் பிறமொழிப் பாடல்கள் வழங்கிலர் தமிழே இனிமைத் தமிழே இசைக்கனர், மணிநகர் எங்கனும் மாபெருங் திருநாள் அணிபெறத் திகழ்ந்தது ஆர்ப்பொலி யுடனே. (78)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/25&oldid=665738" இலிருந்து மீள்விக்கப்பட்டது