பக்கம்:பூங்கொடி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

45

o

விழாவயர் காை

ஒற்றுமை பர்ப்புக எத்திசை நோக்கினும் எழுப்புக மேடை தத்தங் கொள்கை தவிர்த்து நாடும் மொழியும் வளம்பெற முன்னுவ தொன்றே வழியெனக் கருதி வழங்குக பேருரை முத்தமிழ் ஒலியே முழங்குக யாண்டும் சிறுசிறு பகையைச் சிங்தைவிட் டகற்றுக ஓரினம் காமென உன்னுக பெரிகே.

வாழிய வாழிய

காரினம் மழையைக் காவா கருள்க பசிப்பிணி வறுமை பகைமை நீங்கி வசைக்கிலக் கிலதாய் வளர்க அரசியல் செல்வங் கல்வி சிறந்துமிக் கோங்குக வாழிய பொங்கல் வாழிய திருநாள்’ என்னுமில் வறிக்கை எங்கனும் பரந்தது;

பொங்கற் கொண்டாட்டம்

பொழிபனி கழியப் பொங்கலும் வந்தது; எழில்பெறச் செய்தனர் இல்லங் தோறும் வெண்ணிறச் சுண்ணம் விளைத்தது தாய்மை; கண்கவர் முறையிற் கட்டினர் தோரணம்; வண்ணப் புத்துடை வகைவகை பூண்டு கன்னல் துண்டினேக் கடித்திடும் சிறும கார் தெருவினில் ஒடித் திரிந்தனர் யாண்டும்; கருவிழி மகளிர் கடும்புனல் ஆடிக் தறிதரும் ஆடை கரித்தனர் ஆகி நெய்வழி பொங்கல் செய்ம்முறை செய்து

கைவணம் காட்டிக் காதலர் மகிழப்

5.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/24&oldid=665727" இலிருந்து மீள்விக்கப்பட்டது