பக்கம்:பூங்கொடி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூங்கொடி

20

25

30

35

சிறுகச் சிறுகச் சீரிழங் தேகுதல் அறியக் காணுர் அயர்ந்தனர்; அங்காள் பொங்கல் நாளெனும் மங்கலத் திருநாள் எங்கணும் மகிழ்ச்சி இலங்கிட வந்தது;

அறிக்கை விடுதல் கட்சி சமயங் கருதிடா நல்லோர் நச்சி ஒருசிலர் நாட்டு மக்கட்கு ஆய்ந்து வரைந்ததோர் அறிக்கை அனுப்பினர்;

விழாக் கொண்டாடுக ‘தமிழர் திருநாள் தைமுதல் நாளாம் அமிழ்கென இனிக்கும் பொங்கல் திருநாள் உழைப்பின் உயர்வை உணர்த்தும் பெருநாள் சளேப்பிலா முயற்சி கருபயன் பெற்றுப் புதுமை இன்மம் பூணும் நன்னுள் இதுவே பெருவிழா எனக்கொண் டாடுக; ஆங்காங் குறையுநர் அயலவர் பண்புகள் நீங்கிய திருநாள் கினேந்திதைப் பேணுக பிறபிற பண்புகள் பேணிய போதும் நமக்கென மொழியும் நாளும் உளவென உலகம் அறிய உணர்த்துவம் வாரீர்;

நகரை அணிசெய்க பலவகைத் தோரணம் பாங்குடன் நாற்றுமின் வளர்குலைக் கமுகும் வாழையுங் கட்டுமின் கிளரொளி மாடங் கிண்படு குடிசை - யாங்கனும் யாங்கணும். ஒங்குக இன்பம் . . .

4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பூங்கொடி.pdf/23&oldid=665716" இலிருந்து மீள்விக்கப்பட்டது