உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

‘முறை ஆட்டத்தின்’ தொடக்கத்திற்கு முன்பு, நாணயத்தைச் சுண்டியெறிவதின் மூலம் முடிவு செய்ய வேண்டும்.

நாணயம் சுண்டுவதில் வெற்றி பெறுகிற குழு அடித்தெறியும் வாய்ப்பைத் தெரிந்தெடுத்தால், மறு குழு ஆடுகளப் பகுதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

(வென்ற குழு பக்கம் வேண்டுமென்றால், அடுத்தக் குழு அடித்தெறியும் வாய்ப்பை மேற்கொள்ள வேண்டும்.)

நாணயம் சுண்டியெறிவதில் வெற்றி பெற்ற குழுவானது விரும்பினால், எதிர்க்குழுவினருக்கு முதலில் எது வேண்டும் என்பதைத் தெரிவு செய்து கொள்ளும். உரிமையைத் தரலாம்.

முதலாட்டத் தொடக்கத்தில் முதல் முறையாக ‘அடித்தெறிந்து’ ஆடத் தொடங்கும் (in) குழுவிலே, 3 ஆட்டக்காரர்களே அடித்தெறியும் (சர்விஸ் போடும் ) வாய்ப்பைப் பெறுகின்றார்கள். அடுத்து வாய்ப்பு பெறுகின்ற எதிர்க்குழுவினர், 5 பேர்களுக்குமே அடித்தெறியும் வாய்ப்பு கிடைக்கின்றது.

3. போட்டி ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, ‘மாதிரிப் பந்தாட்டம் (Trial Ball) ஆடிப்பார்க்க, ஒரே ஒரு முறைதான் அனுமதிக்கப் படுவார்கள். மாதிரிப் பந்தாட்டம் ஒரு முறை ஆடிய பிறகு, ‘ஆடுங்கள்’ (Play) என்று நடுவர் ஆணையிட, முறையான ஆட்டம் தொடங்கி விடுகிறது.