பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

6. போட்டி ஆட்டத்திற்குரிய விதி முறைகள் (Match)

1. ஒரு. பந்தாட்டப் போட்டி, 3 முறை ஆட்டங்களை (Games) அல்லது 5 முறை ஆட்டங்களைக் கொண்டதாகும். மூன்றில் இரண்டு முறை ஆட்டங்களில் வெற்றி பெறுகின்ற அல்லது ஐந்தில் மூன்று முறை வெற்றிபெறுகின்ற குழுவே போட்டியில் வென்றதாக அறிவிக்கப்படும்.

முதன் முதலாக 29 வெற்றி எண்கள் எடுக்கின்ற குழுவே, ஒரு ‘முறை ஆட்டத்தில்’ வெற்றி பெறும்.

ஒவ்வொரு 'முறை ஆட்டம்' முடிந்த பிறகும், குழுக்கள் தங்களது ஆடுகளப்பக்கங்களை (Courts) மாற்றிக் கொள்ள வேண்டும்.

முன் நடந்த ‘முறை ஆட்டத்தில்’ வெற்றி பெற்ற குழுவே, தொடர்ந்து வருகின்ற முறை ஆட்டத்தில் முதலில் அடித்தெறியும் வாய்ப்பை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு ஆட்டத்திற்கிடையலும், 5 நிமிட நேரம் இடைவேளையுண்டு.

இரண்டு குழுவினரும் ஆளுக்கொரு முறை ஆட்டத்தில் வென்று மூன்றாவது முறை ஆட்டம் நடைபெறுகிற பொழுது (Third game), ஏதாவது ஒரு குழு 8, 15, 22 என்ற வெற்றி எண்களை எடுத்தவுடன், தங்களுடைய ஆடுகளப் பக்கங்களை மாற்றிக் கொண்டு ஆட வேண்டும்.

2. ஆடுகளத்தின் ஒரு பகுதி அல்லது அடித்தெறிதல் இவற்றில் எது வேண்டுமென்பதை, முதல்