பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

(கோட்டின் மேல் ஒரு கால் இருந்தாலும், அவர் ஆடுகளத்திற்கு வெளியே இருக்கிறார் என்றே கொள்ளப்படும்.)

17. ஆடுகள எல்லைக் கோடுகளுக்கு வெளியே, பந்தை அனுப்பி விடுதல்.

பொதுக் குறிப்புகள்:

1. அடித்தெறியும் போதோ அல்லது விளையாடும் சமயத்திலோ, ஆடுகள எல்லைக்கு வெளியே செல்கின்ற பந்தை எடுத்தாடுவது, அவரவர் விருப்பத்திற்குரிய ஆட்டமாகும்.

2. ஆடுகளத்திற்கு வெளியே செல்கின்ற பந்தை எடுத்தாட முயற்சிப்பது (Attempt), பந்தை ஆடியதற்குச் சமமாகும். அதை, பந்தாடியதாகவே ஏற்றுக் கொள்ளப்படும்.

3. பந்தை அடித்தெறிய ஒரு ஆட்டக்காரர் முயன்று செயல்பட்டதிலிருந்து பந்து மேலெழும்பி, பின் தரையை தொடுகிற வரைக்கும்.—

அல்லது மேலே கூறிய தவறுகளில் ஏதாவது ஒரு தவறு நேர்கிற வரைக்கும்—

அல்லது பந்து வலையைத் தொட்டது (Let) எனறு நடுவர் கூறுகிற வரைக்கும்

பந்து ஆட்டத்தில் உள்ளதாகவே (Ball in Play) கருதப்படும்.