உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூப்பந்தாட்டம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

4. மூன்று ‘முறை ஆட்டங்களும்’ முடியும்வரை, எந்த ஒரு ஆட்டக்காரரையும் ஆட்ட நேரத்தில் மாற்றவோ, அல்லது மாற்றாட்டக்காரர்களை வருவித்து ஆட அழைப்பதோ கூடாது.

5. ஒவ்வொரு போட்டி ஆட்டத்திற்கும் ஒரு நடுவர், இரு கோடு காப்பாளர்கள், வலைக்கான நடுவர் (Net Referee)ஒருவர், வெற்றி எண் குறிப்பாளர் (Scorer) என்று ஆட்ட அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

6. ஆடுதற்கேற்ற கால நிலையை அறிந்து சொல்வதற்கும், விளையாடுவதற்கேற்ற வெளிச்சம் இருக்கிறதா என்பதை நன்குணர்ந்து யோசித்துத் தீர்மானம் எடுக்கவும் நடுவரே முழு அதிகாரம் நிறைந்த பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். ஆட்டத்தைப் பொறுத்தவரை, அவர் எடுக்கும் முடிவே இறுதியான முடிவாகும்.

7. எதிர்பார்த்திராத, அல்லது தற்செயலாக நிகழும் இடையூறுகளுக்காக ஆட்டம் நின்று போனால், மீண்டும் ஆட்டத்தைத் தொடங்கிட, அடித்தெறியும் வாய்ப்பை அதே குழுவிற்குத் தந்து (Let), ஆட்டத்தை நடுவர் தொடங்கி வைக்க வேண்டும்.

8. பந்து வலையில் பட்டு விழுந்தது (Let) அல்லது பந்து தவறாக ஆடப்பட்டது (Fault) என்பனவற்றை, மற்ற ஆட்டக்காரர் சுட்டிக் காட்டி, முறையிட்டுக் கேட்டாலும் கேட்காவிட்டாலும், உடனே அறிவிக்க வேண்டியது நடுவரின் கடமையாகும்.

9. ‘தவறு’ என நடுவர் ஆட்ட நேரத்தில் தவறுதலாக அறிவித்துவிட்டு, உடனே சரியென்று திருத்திக்-