உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

அமெரிக்க ராணுவத்தின் அமைப்புக்குத் தேவையான பணம், ஆயுதங்கள், வெடிமருந்துகள், உணவுப்பண்ட வகையறாக்கள் முதலானவற்றை தனது நாட்டுக்காக வாதாடிப் பெற்றுக் கொடுத்தார்.

33. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுதந்தரப் போராட்டத்திற்காக, இங்கிலாந்துக்கும் ஐக்கிய நாடுகளுக்கும் இடையே பெஞ்சமின் ஒரு சமாதான ஒப்பந்தத்தை உருவாக்கித் தந்தார்.

34. அமெரிக்காவில் அடிமை முறையை அடியோடு ஒழித்து விட அவர் வாதாடினார். அதற்கான துண்டுப் பிரகரங்களையும் வெளியிட்டுப் பணிபுரிந்தார். தனது பத்திரிகையில் பல கட்டுரைகளையும் கருத்துக்களையும், கண்டனங்களையும் எழுதினார்.

35. அமெரிக்க சுதந்திரத்திற்காகப் பாடுபடும் சுதேசிக் காங்கிரஸ் போராட்ட அணிகளின் வளர்ச்சிக்கு தனது சொந்த பணத்தையும் சொத்துக்களையும் கொடுத்து உதவினார்; அதற்காக அரும்பாடுபட்டார்.

36. ‘எங்கு மக்கட் சுதந்திரம் வாழ்கிறதோ அங்கேதான் எனது நாடு இருக்கிறது’, என்ற சுதந்திரப் போர்ப் பிரகடன தாரக மந்திரத்தை மக்களிடையே எழுச்சி பெற முழக்கமிட்டுப் போராடி அரும்பாடுபட்டார்.

37. பெஞ்சமின் ஃபிராங்ளின், மக்கள் நல்வாழ்வுத் துறைகளுக்கு எது எது முதல் தேவைகள் என்பதை ஆராய்ச்சி செய்து அவற்றை எல்லாம் செய்தார். உயிரையும் உடலையும் பணயம் கட்டிப் பணியாற்றியவர் அவர்.

38 அச்சகத் தொழிலாளியாக உலகுக்கு அறிமுகமான பெஞ்சமின் ஃபிராங்ளின், பத்திரிகை ஆசிரியராக ஓர் எழுத்தாளராக, சங்கீத வித்வானாக, புதுப்புது கண்டு பிடிப்பு