உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

பெஞ்சமின் ஃபிராங்ளினின்

போக்கு அறவே பிடிக்காததால், மனவெறுப்போடு அதைப் பொறுத்துக் கொண்டே, பத்திரிகைப் பணிகளிலே வல்லவராகத் தேர்ந்து வந்தார்.

ஒரு முறை ஜேம்ஸ், தனது பத்திரிகையிலே மாசாசூ செட்ஸ் சட்டசபை நிகழ்ச்சியை தவறாக வெளியிட்டதால், அந்த செய்தியைக் கண்ட சம்பந்தப்பட்ட சட்டசபை உறுப்பினர் ஒருவர், ஆசிரியரான ஜேம்ஸ் மீது வழக்கு தொடர்ந்து ஒரு மாதம் சிறை தண்டனையைப் பெற்றுத் தந்துவிடவே, ஜேம்ஸ் சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த இக்கட்டான நேரத்தில் வேறு வழியில்லாமல், பெஞ்சமின் அண்ணனது பத்திரிக்கைக்கு ஆசிரியராக அமர்ந்தார். சந்தர்ப்பம் கிடைத்தபோது எல்லாம் பெஞ்சமின் அந்த சட்டசபை நிகழ்ச்சிகளை எழுதி, கேலியும் கிண்டலும், கண்டிப்புமாக வெளியிட்டு வந்தார். அப்போதுதான், ஜேம்சுக்கு தனது தம்பியின் திறமையைப் பாராட்டும் சகோதரப் பாசம் உருவானது.

ஆனால் ஜேம்ஸ், அவருடைய பத்திரிகைக்கு அவர் ஆசிரியராக இருக்கக்கூடாது என்ற நிபந்தனையோடு அவர் சிறையிலே இருந்து விடுதலையாகி வரும்நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் அண்ணன் தம்பிக்குள்ளே பெரிய சச்சரவு உருவானதால், பெஞ்சமின் பத்திரிகை ஆசிரியர் பொறுப்பிலே இருந்தும், அச்சகப் பணியிலே இருந்தும் விலகிவிட்டு சுதந்திர மனிதனாக வெளியே வந்தார். வேறு வேலை தேடலானார்.

எந்த அண்ணன் புகழைக் காப்பாற்றினோமோ அந்த தமையனை விட்டுவிலகி, போஸ்டன் நகரிலே இருப்பதை விட வெளியூருக்கு எங்கேயாவது போய்விடலாம் என்று முடிவு செய்து கொண்டு, பிலடெல்பியா என்ற நகருக்குப் புறப்பட்டார். பெஞ்சமின் தந்தை பிராங்ளினுக்கு