நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
37
ஒதுக்கு தனது பத்திரிகையில் எழுதினார் ஃபிராங்ளின். அதற்கான எல்லாத் தேவைகளுக்கும் வாக்கெடுப்பு ஒன்று நடத்துமாறு சட்டசபையைக் கேட்டுக் கொண்டார்.
ஆனால், சட்டமன்றத்தை ஆட்டிப் படைத்து வந்த குவாக்கர்கள் எனப்படும் சமையக் கோட்பாளர்கள், சமாதானம் பற்றிப் பேசி பிற நாட்டவரோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாய் வேதாந்தம் பேசினார்கள். இதனால், பெஞ்சமின் எண்ணம் வெற்றி பெற இயலவில்லை. இந்தப் பிரச்னையை பெஞ்சமின் பொதுமக்களிடம் வைத்துப் பேசினார், எழுதினார்.
இராபர்டின் காபி மாளிகை என்ற இடத்தில் 1200 பேர், இராணுவத் தற்காப்புச் சங்கப் படையில் சேர்ந்திட கையொப்பமிட்டனர். இந்தசங்கம் ஒவ்வொரு குடியேற்றப் பகுதிகளிலும் பரவியதால், ஏறக்குறைய பத்தாயிரம் வாலிபர்கள் கையொப்பமிட்டனர். இந்த படை வீரர்கள் அனைவரும் பல பிரிவுகளாகப் பிரிந்து, குடிப்படைகளாக உருவெடுத்தன. தாய்மார்கள் அங்கங்கே பணம் திரட்டியது மட்டுமின்றி, ஒரு படை அமைப்புக்கு என்ன தேவையோ அதைச் செய்து கொண்டிருந்தார்கள். பல்வேறு குழுப் பிரிவுகளுக்கேற்றவாறு, பட்டுத்துணியாலானக்கொடிகள், இலட்சிய முத்திரைகள் போன்ற இராணுவப் பணிகளை அங்குள்ள பெண்கள் செய்து வந்தார்கள்.
இந்த நேரத்தில் தோமஸ் பாண்ட் என்பவர், பிலடெல்பியா நகரில், பைத்தியம் பிடித்தவர்களுக்கான விடுதி, மருத்துவமனையைக் கட்ட பணம் சேர்த்துக் கொண்டிருந்தார். அப்போது, பெஞ்சமின் உதவியையும் அவர் நாடினார். ஆனால், அவரது முயற்சி தோல்வி பெற்றது. காரணம், சித்த சுவாதினிகளுக்கு மருத்துவ மனையா? இதை நாம் கேள்விப்பட்டதும் இல்லையே என்ற அறியாமைதான்.