பெண்களும் பேரழகு பெறலாம் I 7 இல்லாததினால் தான். ஆகவே, பெண்கள் மனவலிமை அதிகம் பெற்றிருந்தாலும், அவர்களுக்குள்ள மென்மை, மெலிந்த தன்மை இவற்றை உன்னிப்பாக ஆராய்ந்தே பயிற்சிகளைத் தர வேண்டும். நீங்களும் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். 2. உடலழகுப் பயிற்சிகளினால் உண்டாகும் நன்மைகள் : உடலுக்குப் பயிற்சி என்றவுடனேயே பயந்துவிட வேண் டாம் . பயில் வான்கள் போல் உடல் மாறி விடுமோ, தசைகள் முறுக்கேறி விடுமோ, ஆண் தன்மை வந்து விடுமோ, இருக்கின்ற அழகு நடை போய் விடுமோ என்று அச்சமடைய வேண்டிய அவசியமே இல்லை. அப்படி அச்சப்படுத்துவோர் அறியாதவர்கள். அறிவிலிகள். உடலுக்கு ஒரு முரட்டுத்தனமான வலிமையைக் கொடுப்பது என்பது தான் உடற் பயிற்சியின் முக்கிய நோக்கம் அல்ல. பயிற்சியின் போது, தேவையான உறுப் புகளை சிறிது நேரம் நம்முடைய கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்து, பலம் பெறுவதற்காக இயக்குகிறோம். அவ்வளவுதான். உறுப் புக்கள் சிறப்பாக இயங்கும் போது,ான், உடலுக்கு நலமும் பலமும் வளமும் மிகுதியாகக்
பக்கம்:பெண்களும் பேரழகு பெறலாம்.pdf/19
Appearance