இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வயலெங்கும் கதிர்சாய,
மரமெங்கும் குலைசாய
வற்றாப் பொய்கை
அயலெங்கும் நீர்சாயக்,
கயல்சாயக், குலைசாய,
அழகுக் கூந்தற்
பெயல்சாய, இடைசாய.
நடைசாய, விழிசாயப்,
பேச்சும் சாய
மயலூட்டி வருமூசைப்
பைம்பொன்னை வாயார
வாழ்த்து வோமே!
1
கீழ்த்திசையில் அலையொதுங்கக்,
கிளைசெடியிற் பூவொதுங்கக்,
கிள்ளை கொஞ்ச
மேத்திசையில் இருளொதங்க,
விரிவானிற் குளிரொதுங்க,
வெய்ய வாடை
நாத்திசையிற் போயொதுங்க,
நறுமலரில் வண்டொதுங்க,
நாட்டுப் பெண்கள்
வாழ்த்திசையில் நாணுெதுங்க
வருமூசைப் பைம்பொன்னை
வாழ்த்து வோமே !
2