உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சலி தியாக உணர்வும், தேசப்பற்றும், விடுதலை வேட்கையும் கொண்டு- மக்கள் நலனுக்காக வாழ்ந்து ரத்தம் சிந்திய அரசியல் தலைவர்கள் அறுவரைப் பற்றி இந்நூல் நினைவு கூறுகிறது. இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகள் சோகம் நிறைந்தவை. மக்கள் நலனில் அக்கறை கொண்ட மாமனிதர்களும்; நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் சென்ற அரசியல் தலைவர்களும், சமூகத்தின் ஒப்பற்ற மேம்பாட்டிற் காக சாதனை புரிந்தவர்களும் கொடியவர்களின் கொலை வெறிக்கு ஆளாகி உயிர் துறந்தனர். அஹிம்ஸையைக் கற்றுத் தந்து-அதனால் சுதந்திரமும் பெற்றுத் தந்த அண்ணல் வாழ்ந்த புண்ணிய பூமியில்-வஞ்சகனது முதல் குண்டுக்கு அண்ணலே பலியானார். காந்திஜியைத் தொடர்ந்து, நேற்று இந்திரா காந்தி, இன்று ராஜீவ்காந்தி என்று கொலைப் பட்டியல் பெருகுவது ஆரோக்கியமான தேசத் திற்கு அழகல்ல. இந்நூலில் அத்தகைய மிருகத்