பக்கம்:மகாத்மாகாந்தி முதல் ராஜீவ்காந்தி வரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 தனமான கொலை வெறிக்கு இலக்காகிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம் கிறது. காந்தி மகானுடைய வாழ்க்கை ஒரு திறந்: புத்தகம். அந்த மகானுடைய வாழ்க்கையின் மிகச் சில பக்கங்களிலேயே இந்நூலில் இடம் பெற்றிருந் தாலும், அறிந்ததும், அவரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியவையும் இதில் உள்ளன. வாழ்நாள் முழுதும் வெள்ளையரோடு அகிம்சைப்போர் தொடுத்து; இருண்ட இந்தி யாவை சுதந்திர ஒளி வெள்ளத்திற்கு மீட்டுத்தந்த தேசத் தந்தைக்கு அன்னியர்களால் ஏற்படாத ஆபத்து கொடியவன் கோட்சேயினால் ஏற்பட்டது. காந்திஜி ஒரு சமயம் எழுதியிருந்தார்: "யாரா வது என்னைக் கொலை செய்யும்போது என் உதட்டில் அந்தக் கொலையாளிக்கான பிரார்த் தனையுடன் நான் இறப்பானேயாகில், அதன் பின்னரே வீரனின் அஹிம்சையை' நான் அடைந் தவன் என்று சொல்லிக் கொள்ள முடியும்" என்றார். தாம் கூறியது போலவே காந்திஜி 'அஹம்சா வீரனாகவே அமரரானார்.

  • மனிதனை விலங்குகளைப் போல் விலைபேசி வாங்கி; அடிமைப்படுத்தி வாழ்ந்தவர்களிடமிருந்து அடிமைகளுக்கு விடுதலையளித்தவர் ஆப்ரகாம் லிங்கன். வறுமையையும், வேதனைகளையும்