ఖీ} மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.
குறைகளை மட்டும், தோளில் சுமந்து, குன்றேறி நின்று, 'குவலயமே பார்த்தாயா குறையுடைய ஒரு மனிதனை’’ என்று, கூக்குரலிட்டுக் கொண்டே இருந்தால், குறையுடை யவன், இன்றையச் சமுதாயத் தத்துவப்படி மேலும், பண்பிழந்தவனாவனே தவிர, நிறையுடையவனாக்கப்படான்!
காந்தியடிகளிடம் அமைந்த நல்ல பண்புகள், உலகத்தாலே இன்றும் போற்றப்பட்டு வருகின்றன.
அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கோட்சேயிடம் இருந்த தீய பண்பு, அவனியால் இன்றும் வெறுக்கப்பட்டு வருகிறது:
எனவே, ஒரு மனிதனிடம் இயற்கையாகவே சில நல்ல பண்புகள் அமைகின்றன. அவைதாம், அவன் பிறந்த நாட்டுக்கும், மொழிக்கும், நாகரிகத்திற்கும், பொன்றாப் பெரும் புகழைத் தேடித் தந்து விடுகின்றன.
அதுபோலவே, சில தீய பண்புகளும் இயற்கைக்கு விரோதமாக அமைகின்றன: அவற்றால், உலகமே கெட்டு அழிந்தொழியும் அவலமும் உருவாகி விடுகின்றது.
அதனால்தான்், ஒரு மனிதனிடம் இயற்கையாக இருக் கின்ற சில பண்புகளை இயற்கையோடு ஒப்பிட்டு, நன்மை தீமைகளை நாடுவதில் தவறில்லை என்று, எண்ணுகின்றேன்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை 'மலர்' என்று குறிப்பிடுகின்றேன்!
'மலரா', அட. இது எங்களுக்குத் தெரியாதா? இன்றுவரை நாங்கள் மலரைக் காணாதவர்களா?
கட்டவிழாத மொட்டாக அது இருந்த நேரத்தில், உஷை காலத்தில் ஊதி அவிழ்க்கின்ற தேவதையை மகாகவி காளிதாசரும், நோபல் பரிசு பெற்ற கவிஞர் தாகூரும் எழுதிட - நாங்கள் என்ன படிக்காதவர்களா?
‘‘வைகறையிலே போதாகி, மதியத்தில் அரும்பி - மாலையிலே மலர்கின்ற மலர்' என்று தமிழ் மறை தந்த