జీ: மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர். எத்தகைய எதிர்ப்பிற்கும் மக்கள் திலகம் அஞ்சாதவர்
என்பதற்காகத்தான்ே இமயத்தை சமமிடுகின்றீர்! வரவேற்
கின்றேன். உமது உவமையை!
ஆனால், மனிதனின் உள்ளம் ஆடுகின்ற உள்ளம்! அந்த ஆட்டத்தை அறிஞர் அண்ணாவின் அறிவுரையால் எம்.ஜி.ஆர். அவர்கள் அடக்கிவிட்டார்.
ஆடாத மலையைவிட, ஆடுகின்ற உள்ளம் அடங்கி விட்டால், அது ஆடா விட்டால், ஆடாத மலையைவிட 'மானப் பெரிது’ என்று வள்ளுவரே கூறியுள்ளாரே!
மலையைத் தகர்த்து விட்டோம் என்ற மண்டைக் கர்வமோ உமக்கு அப்படியானால் அதைவிடச் சிறிய உவமைக்கு ஒப்பிட்டுக் கேட்கட்டுமா?
புற் பூண்டுகள் மேலே துரங்கும் மார்கழி மாதப் பணித்துளி என்று புகல்கிறேன்! என்ன சொல்கின்றீர்?
புல் துனியில், மரகதப் பச்சை நிறத்தோடு ஒளி எழுப்புகின்ற தன்மையைப் பார்த்து, எம்.ஜி.ஆர். அவர்களின் ஒளிமயமான சிறந்த பண்புகளை எண்ணி, இந்த உவமையைத் தேர்ந்தெடுத்திரோ? என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது உமது உவமையை:
வைகறை - காலையாவதற்கு முன்னால்தான்், நீர் கூறும் பனித்துளிக் காட்சி! அடிவானத்தின் விளிம்பை விட்டு, எழு ஞாயிறு எரி ஞாயிறாக மாறும்போது, பனித்துளி மறைந்து விடுகின்றது!
அப்படியானால், எம்.ஜி.ஆர். அவர்கள் எதிர் தாக்குத லால் அழிந்து படுபவரா இந்த உவமையும் ஈடு இலையே!
பிறகு எதுதான்் ஈடு? ஒருவேளை, வெள்ளி நிலாவைச் சுற்றி வரும் விண்மீன் கூட்டமென்று மக்கள் திலகத்தைக் கூறலாமோ!
ஏனைய்யா. ஒருமைக்கும் பன்மைக்கும் வித்தியாசம் தெரியவில்லையே உமக்கு என்று கேட்கமாட்டேன்!