உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மக்கள் நெஞ்சில்-எம்-ஜி-ஆர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எமது எண்ணம்

'மக்கள் நெஞ்சில் எம்.ஜி.ஆர்.’’’ தமிழ் மண்ணிலே இருந்து, கேரளத்தில், பெரும்பான்மையினராக வாழும் பாலக்காடு எனும் எழிலூரிலே - குடிபெயர்ந்தமைந்தவர் - செந்தமிழ் வேளிர் பரம்பரையர்.

தமிழ் பூமியிலே வளர்ந்தார்! புரட்சி நடிகராக மாறினார்: மலர்ந்து மனம் தந்தார் - புரட்சித் தலைவராக!

முத்தான் முதலமைச்சராக குறிஞ்சி மலர் போல் பூத்து, தமிழக பூந்தோட்டத்திற்குப் புகழ் மணம் ஏற்றினார்! அழகுக்கழகான மக்களாட்சியை ஏழைகள் வாழ்த்திட நடாத்தினார்:

வாரி வழங்கும் தடக்கையாக வாழ்ந்து, தனக்கென ஒன்றுமில்லாமல், காதறுந்த ஊசியும் வாராது காண் கடை வழிக்கே என்ற, பட்டினத்தாராக அவர் வாழ்ந்தார்.

மாவீரன் அலெக்சாண்டர், பாரையே உலுக்கி எடுத்துப் பாராண்டவன், ஆனாலும், அவனுக்கும் ஒர் ஆசை!

தான்், பெரும் பயணம் போகும்போது, சவப்பெட்டி யிலே இரண்டு துளைகளை வைத்து, அவன் கைகளை அந்தத் துளைக்களுக்குள்ளே விட்டு வெளியே தெரியும்படி, தனது இரு கைகளையும் ஆட்டிக் கொண்டே மரண ஊர்வலம் நடத்துமாறு ஆணையிட்டார்!

ஏன் தெரியுமா? அவனியையே ஆட்டிப் படைத்த மாவீரன் அலெக்சாண்டர். இறுதியிலே - வெறும் கையோடு தான்் திறந்தபடியே போகிறான். பிறந்தபோது ஏதும் கொண்டு வரவில்லை; இறந்த்போதும் ஏதும் எடுத்துச் செல்லவில்லை என்பதை, பொது மக்கள் அறிந்து பாடம் பெற வேண்டும் என்று நினைத்தார்!