உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணமக்களுக்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



17

நற்குண நற்செய்கைகளையுடைய மனைவி வாய்க்கப் பெற்று விட்டால், அவனுக்கு என்ன இல்லா விட்டாலும், எல்லாம் இருக்கிறது என்றும், ஒருவனுக்கு நற்குண நற்செய்கைகளையுடைய மனைவி வாய்க்கப் பெறாவிட்டால், அவனுக்கு எவ்வளவு செல்வங்கள் இருந்தாலும், ஒன்றும் இல்லை என்றும் நன்கு விளங்குகிறது. இல்லாதது என்ன? எங்கே? குடிசையில். எப்போது? இல்லவள் மாண்பானால் உள்ளது என்ன? எங்கே? மாளிகையில். எப்போது? இல்லவள் மாணாக்கடை. குறளும் இதுதான்:

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
 இல்லவள் மாணாக் கடை?”

இக்குறளை மணமகனும், மணமகளும் தங்கள் உள்ளத்தே வைத்து, வாழ்க்கையை நடத்துவது நல்லது.

சகிப்புத் தன்மை

3.  வீட்டுச் சண்டையிலிருந்து நாட்டுச் சண்டை வரை, கணவன், மனைவி சண்டையிலிருந்து காங்கேய நாட்டுச் சண்டை வரை அடிப்படைக் காரணம் இரண்டே இரண்டுதான். பிறருடைய தேவையை அறிய மறுப்பது, பிறருடைய உரிமையை ஒப்ப மறப்பது ஆகிய இந்த இரண்டுந்தான். எங்கே பிறருடைய உரிமையை ஒப்ப மறுக்கிறார்களோ, அங்கே உடனே தோன்றுவது சண்டைதான். கணவனுடைய தேவையை அறிய மறுத்தாலும், மனைவியினுடைய உரிமையை ஒப்ப மறுத்தாலும், பாகிஸ்தானின் தேவையை அறிய மறுத்தாலும், இந்தியாவின் உரிமையை ஒப்ப மறுத்தாலும், உடனே அங்கு தோன்றுவது சண்டைதான். அச்சண்டை ஒழிய மருந்தும் இரண்டுதான். அவை விட்டுக் கொடுக்கும்

ம-2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/19&oldid=1646345" இலிருந்து மீள்விக்கப்பட்டது