உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணமக்களுக்கு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



18

மனப்பான்மையும், சகிப்புத் தன்மையுமே. இதை மனமக்கள் இருவரும் நன்குணர்ந்து, வாழ்க்கையை நடத்துவது நல்லது.

வாழ்வில் ஒளி

4.  ஆணாகப் பிறந்தவர்களெல்லாம் ஆணல்ல; ஆண்மையை உடையவனே ஆண். பெண்ணாகப் பிறந்தவர்களெல்லாம் பெண்ணல்ல; பெண்மையை உடையவளே பெண். இத்தகைய ஆண்மையையும், பெண்மையையும், இன்றைய மணமக்கள் நிலை நிறுத்திக் காட்ட வேண்டும். அப்படிக் காட்டினால், அவர்கள் வாழ்வில் ஓர் ஒளி வீசுவதை அவர்களே கண்டு மகிழ்வார்கள்.

புகுந்த வீடு

பெண்ணாகப் பிறந்த ஒவ்வொரு பெண்ணும், பிறந்த குடிப் பெருமையை நிலை நிறுத்தியாக வேண்டும். இதற்காகப் பிறந்த குடிப் பெருமைகளை எல்லாம் புகுந்த வீட்டிற் போய்ப் பேசிக் கொண்டிருப்பதல்ல இதற்கு வழி. ஒரு பெண் பேசினாள். “எங்கள் வீட்டுச் சாக்கடையெல்லாம் பாலும் நெய்யும் ஓடும்” என்று. மற்றொரு பெண் பேசக் கேட்டேன்,“எங்கள் வீட்டில் பிச்சைக்காரர்களுக்குப் போடுகிற அரிசி கூட, இந்த வீட்டில் உலையில் போடுவதில்லை” என்று. உள்ளம் நடுங்கிற்று. அப்படிப் பேசினால், அது பிறந்த குடிக்குச் சிறுமையைத்தான் தேடித் தரும். பிறந்த குடிப் பெருமையை நிலை நிறுத்துவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அது புகுந்த குடிப் பெருமையை உயர்த்துவதன் மூலம்தான் முடியும். ஆகவே, இன்றைய மணமகள் புகுந்த குடிப் பெருமையை உயர்த்துவதன் மூலம், பிறந்த குடிப் பெருமையை நிலை நிறுத்தியாக வேண்டும். இது பிறந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/20&oldid=1646346" இலிருந்து மீள்விக்கப்பட்டது