உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மணமக்களுக்கு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



19

குடிக்கும், புகுந்த குடிக்கும் பெருமை தேடியதாக முடியும், இதை மணமகள் தன் உள்ளத்தில் வைத்து வாழ்க்கையைத் தொடங்குவது நல்லது.

பெண்ணின் கடமை

5 . தன்னைக் காத்துக் கொண்டு, தன்னைக் கொண்ட கணவனைப் பேணி, பிறர் புகழும்படியான வழியில் நடந்து, சோர்வு இல்லாமல் உழைத்து, இல்லறத்தை நடத்துபவளே பெண் என வள்ளுவர் கூறுகிறார். குறளும் இதுதான் :

“தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
 சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”

ஆணுக்குக் கற்பு

6.  இக்கால மக்களிற் சிலர் வள்ளுவர் மீதும் குறை கூறத் தொடங்கி விட்டனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், பெண்களுக்கு மட்டும் கற்பை வலியுறுத்தி, ஆண்களை அடியோடு விட்டு விட்டார் என்பதுதான். அது தவறு. உண்மையுமல்ல. ஆண்களுக்குக் கற்பை மிக, மிக வலியுறுத்திக் கூறியிருக்கிறார். அதுவும் பெண் மக்களையே உவமையாகக் காட்டிக் கூறியிருக்கிறார்.

“ஆண் மகனே! இதோ பெண் மக்களைப் பார். அவர்கள் எப்படிப் பிறர் துணையின்றித் தங்களைத் தாங்களே காத்துக் கொள்கின்றார்களோ, அப்படி நீயும் கற்பு நெறி நின்று உன்னை நீ காத்துக் கொள்ளாவிடில், உனக்கு ஏதடா பெருமை?” என்று கன்னத்தில் அறைந்தது போல, அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறார். குறளும் இதுதான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணமக்களுக்கு.pdf/21&oldid=1646343" இலிருந்து மீள்விக்கப்பட்டது