3 கான் இனாமா. நாளைக்கு மத்தியானம் சாமான்கள் கொண்டு வரும்போது, கப்பல்லே அவனை சந்தித்துக் கேட்கும்படி சொல்லியிருக்கான். பன்னித் தேவடியா புள்ளெங்க, சொன்னாச் சொன்னபடி செய்யும்..." வார்த்தைக்கு வார்த்தை சுகமான வசவுகளையும் கெட்ட வார்த்தைகளையும் தாராளமாகக் கலந்து கொன் டிருந்தான் அவன். அப்படிக் கலக்காமல் அவனால் பேச முடியாது என்றே மணிக்குத் தோன்றியது. நாகரிகமாகவும் நல்ல நிலைமையிலும் இருப்பதாகக் தோற்றம் காட்டிய ஒருவர், ஏ, அந்தத் தடியனிடம் பேசி நமக்கு ஒரு கூலிங்கிளாஸ் வாங்கிக் கொடேன். நீ அவன் கிட்டேயிருந்து ஒசியிலே அடிச்சிட்டுவரப்பாரு. நான் உனக்கு வம்திங் தந்துடுறேன். கவலைப்படாதே. உன்னை நல்லாவே கவனிப்பேன்’ என்றார். அவர்களுடைய பேச்சில் பேராசையும் சின்னத்தனமும் குதி போட்டுக் கும்மாளியிட்டன. பகட்டான புறத் தோற் றத்தினுள்ளே புதைந்து கிடந்த சிறுமைக் குணங்கள் அவர் களது பேச்சின் மூலம் கட்டவிழ்த்துக்கொண்டு விளை ಓffT ೬೬೯ಕ. - இயற்கையின் வலிமையும் வனப்பும் சிரித்துக் கொலு விருந்த அந்தச் சூழ்நிலையில், இயற்கையை வென்று தனக்கு ஆட்படுத்திக் கொண்ட மனித உழைப்பின் சாதனை மகத் துவமும் மாண்பும் நிரூபணமாகிக் கொண்டிருந்த களத்தி லேயே மனிதரிடம் இயல்புகளாக ஒட்டிக் கொண்டு வளரும் சிறுமைகளின் தன்மையும் வெளிப்பட்டதைக் கண்டு மணி புழுங்கினான். சீ, என்ன பிழைப்பு இது!’ என்று கொதித் தது அவன் உள்ளம். பாஷை தெரியாதவங்களை ஏன் இப்படிக் கேவவமாகக் கருதிப் பேசணும்? மனிதப் பண்பில் நம்பிக்கை வைத்துத்
பக்கம்:மனிதர்கள்.pdf/33
Appearance