1. சத்திய தரிசனம் சதானந்தத்தை குழப்பம் ஆட்கொண்டு விட்டது! பல ரகமான எண்ணங்கள் அலைமோதின. அவர் உள்ளத்திலே. சென்ற சில மணி நேரத்தில் அவரது காதுகள் கிரகித்துத் தந்த பலவித சிந்தனை ஒலிபரப்புகளும் அவருடைய எண்ணங்களோடு குழம்பி அவர் மன அமைதிக்குச் சங்கு ஊதின. - சதானந்தத்துக்கு முக்கியமாக தேவை மன அமைதி. சிந்தனைத் தெளிவு ஏற்படுவது இருக்கட்டும். எண்ணக் குழப்பங்கள் தலைவலியும் உளவேதனை யும் தந்துவிடும் போல் தோன்றவே, அவர் தனியாக விலகி நடக்கத் தொடங்கினார். அமைதி பெறுவதற்காகத்தான். அன்றைய நிகழ்ச்சிகள் முடிவுற்றிருந்தன. அவரை யாரும் தேடப் போவதில்லை. தேடினால்தான் என்ன? அவ ருடைய இல்லாமை பெரும் குறையாக உணரப்பட மாட்டாது. அப்பெருங் குழுவிலே. உயர் குழு’ என்றும் சொல்லலாம். அங்கு விசேஷமாகக் குழுமியிருந்த அனைவரும் பெரிய வர்கள், மகாப் பெரியவர்கள்! அப்படி ஒவ்வொருவரும் நம்பி யிருந்தனர். சாதாரண மக்களை அப்பாவிகள் என்றும், அறியாதவர்கள் என்றும், மடையர்கள் என்றும் மதித்து, தங்களைத் தாங்களே மிக உயர்ந்தவர்களாகக் கருதிச் செயல் புரிகிறவர்கள். அவர்கள் பண்பினால் பலப்பலர். தொழிலால் ரகம்ரகமானவர்கள். டாக்டர் பேராசிரியர் வக்கீல் பெரும் வியாபாரி செல்வர், பத்திரிகை முதலாளிஇப்படிப் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு, வெற்றிகரமாக வாழ்க்கையை அனுபவிக்கிறவர்கள். இம் மு ைற யி ல்
பக்கம்:மனிதர்கள்.pdf/7
Appearance